ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் நடைமுறை ரத்து

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் நடைமுறை ரத்து

காட்சிப் படம்

காட்சிப் படம்

வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை இ-சேவை வாயிலாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

2021-22ம் கல்வி ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடவடிக்கையினை கைவிடுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அனைத்து சார்நிலை அலுவலகங்கள் மற்றும் மண்டல இணை இயக்குநர்களுக்கு வெளியிட்ட சுற்றறிக்கையில்,

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை, வேலைவாய்ப்பு பிரிவு இணையதளத்தின் வாயிலாக 2011 ஆம் ஆண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக அவரவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில், 6.8.2022 அன்று முதலமைச்சரின் செயலாளர்- III தலைமைச் செயலகம், நடத்திய  ஆய்வுக்கூட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டபடி,  நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது.

இதையும் வாசிக்க டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்?

மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவகைத்திற்கு நேரில் வருகை தரும் விண்ணப்பதாரர்களுக்கு பதிவுகள் மேற்கொண்டு பதிவட்டை வழங்கப்பட வேண்டும். மேலும், வேலைவாய்ப்பு இணைய தளமான www.tnvelaivaaippu.gov.in-ல் நிகழ்நிலையாக அனைவரும் பதிவுகள் மேற்கொள்ளும் வசதி உள்ளதால் அதில் நேரடியாக மாணவர்கள் பதிவுகள் செய்து கொள்ளலாம். மேலும்,  வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள் மற்றும் புதுப்பித்தல்களை இ-சேவை வாயிலாக செய்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்க:   இல்லம் தேடிக் கல்வி திட்டம்: இரண்டு இலட்சமாவது மையத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

எனவே, மேற்படி வசதியினையும் விருப்பம் உள்ளவர்கள் பயன்படுத்திகொள்ளலாம் என்ற விவரங்களை அனைவரும் அறியச் செய்யும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க சார்நிலை அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குநரகம் வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

First published:

Tags: Employment and training department, School