முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / ஆவின் நிறுவனத்தில் வேலை.. டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் 322 காலிபணியிடங்கள்.. விரைவில் அறிவிப்பு!

ஆவின் நிறுவனத்தில் வேலை.. டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்படும் 322 காலிபணியிடங்கள்.. விரைவில் அறிவிப்பு!

ஆவின் வேலைவாய்ப்பு

ஆவின் வேலைவாய்ப்பு

Aavin job announced | மேலாளர், துணை மேலாளர், தொழிநுட்ப வல்லுநர் உள்ளிட்ட 322 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆவின் நிறுவனத்தில் காலியாக காலி பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்புவதற்கான ஆணையை பால்வள ஆணையர்  வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த ஆட்சிக் காலத்தில், மாநிலத்தில் உள்ள மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களில் நடைபெற்ற நியமனங்களில் பல்வேறு முறைகேடு நடந்ததாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து, முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 201 பேரின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, 2021 -22ஆம் ஆண்டு மானியக் கோரிக்கையின் போது, ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான பதவியிடங்கள், அரசின் ஆணை பெற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாகவே நடத்தப்படும் என்று பால்வளத் துறை அமைச்சர் மு. நாசர் அறிவித்தார்.

அதன் அடிப்படையில், ஆவின் நிறுவனத்தில் உள்ள மேலாளர் வரையிலான 322 காலியிடங்களின் எண்ணிக்கையை  பால்வள ஆணையர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பியுள்ளார். விரையில் இந்த பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த பதவிகளுக்கான கல்வித் தகுதிகள்  உள்ளிட்ட இதர பொது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார். எனவே இந்த பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First published:

Tags: Aavin, Government jobs, Jobs