Home /News /employment /

'வேலையில்லா இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

'வேலையில்லா இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்' - மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-4, சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

    வேலையில்லா இளைஞர்கள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. எஸ்.எஸ்.எல்.சி தோல்வி /எஸ்.எஸ்.எல்.சி தேர்ச்சி /எச்.எஸ்.சி/ பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு போன்ற கல்வித் தகுதிகளை படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கும் மேல் வேலைவாய்ப்பின்றி காத்திருப்பவர்கள் உதவித்தொகை பெற சென்னை-4, சாந்தோம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை அணுக வேண்டும். மேலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் சென்னை-32, கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    1. விண்ணப்பிக்கும் மனுதாரர்கள் 5 ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருபவராக இருத்தல் வேண்டும்.

    2 விண்ணப்பதாரர் 40 வயதுக்குட்பட்டவராகவும், ஆதிதிராவிடர் / பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்

    3 விண்ணப்பதாரர்கள் தனியார் நிறுவனங்களில் பணிபுரியாதவராகவும், வேலைவாய்ப்பில் ஈடுபடாமல் இருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

    குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 72,000/-க்கு மிகாமல் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேற்கண்ட தகுதிகள் இருப்பவர்கள் மட்டுமே பெற தகுதியுடையவர் ஆவர். வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்ப படிவத்தினை சென்னை-4, சாந்தோம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பெற்று விண்ணப்பிக்கலாம்.

    ஆட்சியரின் அறிவிப்பு :

    https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/07/2022070854.pdf

    ஏற்கனவே உதவித் தொகை பெற்று வரும் பயனாளிகளில் விண்ணப்பம் சமர்ப்பித்து ஓராண்டு முடிவு பெற்றவர்கள் சுய உறுதி மொழி ஆவணத்தை வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண், உதவித்தொகை எண் (MR. No) வங்கி புத்தகம் நகல் மற்றும் ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

    இதே போன்று அரியலூர் மாவட்டம்  வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகையைப் பெற 31.08.2022 அன்று அல்லது அதற்கு முன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

    அதற்கான அறிவிப்பு விவரம்

    https://cdn.s3waas.gov.in/s319f3cd308f1455b3fa09a282e0d496f4/uploads/2022/07/2022070864.pdf

    இந்த இணையதள பக்கத்தில் காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி