பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா திட்டத்தின் கீழ், தமிழகத்தின் கடலோர மீன்பிடி கிராமங்களில் 433 சாகர் மித்ரா பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள்: 433
மீன்வள அறிவியல்/கடல் உயிரியல்/விலங்கியல் ஆகிய பாட நெறிகளில் பட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். மேற்கூறிய பாடநெறிகளில் விண்ணப்பங்கள் நிரப்ப முடியாத சூழலில், வேதியியல்/ தாவரவியல்/ உயிர் வேதியியல்/ நுண்ணுயிரியல்/ இயற்பியல் பாடநெறி விண்ணப்பதாரர்களை கணக்கில் எடுத்துக் கொள்ளலாம்.
நிபந்தனைகள்:
இது முற்றிலும் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடம். பணியின் அளவு ஓராண்டுகாலம் ஆகும்.
அந்தந்த தாலுகாவில் உள்ள உள்ளூர் மீன்பிடி கிராமங்களில் வசிக்கும் தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
சம்பளம்: செயல்திறன் மதிப்பூதியமாக மாதம் ரூ.15,000 வழங்கப்படும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் அந்தந்த கடலோர மாவட்ட உதவி இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பபங்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.08.2022 ஆகும்.
இதையும் வாசிக்க: புதிதாக 10,300 ஆசிரியர்களை நியமிக்க உள்ளோம் - அமைச்சர் அன்பில் மகேஷ்
கடலோர மாவட்ட உதவி இயக்குனர்களின் முகவரி, தொலைபேசி எண், விண்ணப்ப படிவம், கடலோர மீன்படி கிராமங்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளன.
PMMSY- ENGAGEMENT OF SAGAR MITRAS
நாட்டின் மீன் உற்பத்தியை 2024-25க்குள் அதை 220 லட்சம் டன்களாக அதிகரிக்க பிரதமரின் மத்ஸ்ய சம்பட யோஜ்னா தொடங்கப்பட்டது. உள்ளூர் மீனவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது; அரசுக்கும், உள்ளூர் மீனவர்களுக்கு இடையே தொடர்பு பாலமாக செயல்படுவது; மீன் வளர்ப்பு விவசாயிகள் அமைப்புகளை உருவாக்க முனைவது; வானிலை எச்சரிக்கை, இயற்கை சீரிடர் தொடர்பான தகவல்களை கொண்டு சேர்ப்பது ஆகியவைகல் சாகர் மித்ராக்களின் முக்கிய கடமையாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.