ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் காலியிடங்கள்: எங்கு பிரச்னை? என்ன தீர்வு

பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரம் காலியிடங்கள்: எங்கு பிரச்னை? என்ன தீர்வு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Engineering Education in Tamil nadu: இன்றைய அறிவுசார் உலகில், பொறியியல் கல்வி ஒரு நுகர்வு என்பதைத் தாண்டி மனிதவள மேம்பாட்டுக்கு  துணை புரியும் முதலீடாக மாறி வருகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  2022- 23 கல்வியாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்பட வில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. புள்ளிவிவரங்களின் படி, வெறும் 16 கல்லூரி நிறுவனங்கள் மட்டுமே முழு இடங்களை நிரப்பியுள்ளன. இதில், 3 தனியார் சுயநிதி கல்லூரிகளும் அடங்கும். குறைந்தது 50% இடங்களை நிரப்பிய கல்லூரிகளின் எண்ணிக்கை 236 ஆக உள்ளது.    

  ஒவ்வொரு ஆண்டும், பொறியியல் கலந்தாய்வில்  மாணவர்களை நிரப்ப முடியாத பிரச்சனையை கல்லூரி நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன. தனியார் கல்வி நிறுவனங்களை  தரப்படுத்துவது, கற்றல்- கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவது, கல்வியின் நோக்கங்களை  அகலப்படுத்துவது உள்ளிட்ட தீர்வுகளை கல்வியாளர்கள் தொடர்ந்து அளித்து வருகின்றனர்.

  பொறியியல் கல்வியும் - வேலைவாய்ப்பும்: 

  இன்றைய அறிவுசார் உலகில், பொறியியல் கல்வி ஒரு நுகர்வு என்பதைத் தாண்டி மனிதவள மேம்பாட்டுக்கு  துணை புரியும் முதலீடாக மாறி வருகிறது. தனிமனித பொருளாதாரத்தை அதிகரிக்கும் முயற்சிகளில் ஒன்றாக உள்ளது. எனவே, பொறியியல் படிப்பு தொடர்பான எந்த விவாதமும், வேலைவாய்ப்புத் தன்மை பற்றிய புரிதல் இல்லாமல் முழுமையடையாது.

  வலுவான பொறியியல் கல்விக்கான கட்டமைப்பைக் கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. ஏஐசிடிஇ நிறுவனத்தின் தரவுகள் படி, தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்ட பொறியியல் (இளநிலை + முதுநிலை) இடங்களின் எண்ணிக்கை மேற்கு வங்கத்தை விட 7 மடங்கு அதிகம்.  பொறியியல் கல்லாரியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அண்டை மாநிலமான  கர்நாடகாவை விட இரண்டு மடங்கு அதிகம். ஆந்திரா, கர்நாடக, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், தெலுங்கானா, மகாராஷ்டிரா, டெல்லி என 7 மாநிலங்களின் ஒட்டு மொத்த எண்ணிக்கையை விட  தமிழ்நாட்டில் ஒரு கல்வியாண்டில் படிப்பை முடித்து வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகம். படித்து முடித்து வேலைவாய்ப்புகளை பெறும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் மாநிலமாக திகழ்கிறது.

  தரவு - AICTE

  இருப்பினும், மற்ற மாநிலங்களை விட, பொறியியல் தொழிற் கல்வியுடன் நேரடி தொடர்பில் உள்ள  வேலைவாய்ப்புகளை பெறக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு மிக மோசமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த 2015ம் ஆண்டு Aspiring Mind என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில், பொறியியல் பயின்ற மாணவர்களில், 3.67% பேர் மென்பொருள் தயாரிப்பு பணியிலும், 17.91% பேர்  மென் பொருள் சேவையிலும் , 41% பேர் பொறியியல் அல்லாத துறைகளில் பணியமர்த்தப்பட்டிருப்பதாகவும் தெரிவித்திருந்ததது.

  டெல்லி, ஒடிசா, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள்அதிக  வேலைவாய்ப்புகள் கிடைக்கக் கூட முதல் 25% (100-75%) சதவீதங்களுக்குள் வருவதகாகவும், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் கடைசி 25% சதவீதங்களுக்குள்  வருவதாகவும் தெரிவித்தது.

  மேலும், சென்னை போன்ற பெருநகரங்களில் படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் சராசரி சம்பளங்கள்  மிகக் குறைவாக இருக்கும் வேலைவாய்ப்புகள் பெற்று வருவதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

  தீர்வுகள்? 

  ஆண்டுதோறும், இவ்வளவு இடங்கள் காலியாக உள்ளன? என்ற குறிப்பிட்டு ஒவ்வொரு ஆண்டும்  பொறியியல் கல்வியை சிறுமைப்படுத்தும்  விதமாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், ஒரு  நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற் முறையை கட்டமைக்கும் கருவியாக பொறியியல் கல்வி உள்ளது. வறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கள் சமூக நிலைகளை ஒரே தலைமுறையில் மாற்றி அமைப்பதற்கான சமூகத் தொடர்புகளை பொறியியல் வேலைவாய்ப்புகள் உருவாக்கி தருகிறது.

  எனவே, நவீன தொழிற்சார்ந்த பாடங்களை கற்பிப்பது, பாடங்களில் நெகிழ்வுத்தன்மையை உருவாக்குவது, தொழிற் நிறுவனங்களுடன் சேர்ந்து வலுவான வளாக பயிற்சியை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை மாநில உயர்கல்வித்துறை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுகிறது.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Engineering, IT JOBS