Home /News /employment /

அகில இந்திய தொழிற்தேர்வு - தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு பயிற்சித்துறை அறிவிப்பு

அகில இந்திய தொழிற்தேர்வு - தனித் தேர்வர்களாக விண்ணப்பிக்கலாம் -தமிழ்நாடு பயிற்சித்துறை அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

Department of Employment and Training:தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus), ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் தேசிய தொழிற் பயிற்சி குழுமத்தால் (NCVT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.

    தொழிற்பிரிவுகளில்  கைவினைஞர் பயிற்சி திட்ட தேர்வு அகில இந்திய அடிப்படையில் நடத்தப்படுகிறது. தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தேசிய தொழிற்பிரிவில் சான்றிதழ் (NTC) வழங்கப்படுகிறது.

    தணிவேர்களுக்கான தகுதிகள்: 

    முதல் வகை (category I); தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதார்

    ஏற்கனவே ஏதேனும் ஒரு தொழிற்பிரிவில் ITI-ல் பயின்று தேர்ச்சி பெற்ற முன்னாள் பயிற்சியாளர் Allied தொழிற்பிரிவில் 1 வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தேசிய தொழிற் சான்றிதழ் பெறும் பொருட்டு தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    இரண்டாம் வகை (Category II): திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்

    திறன்மிகு பயிற்சி தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற (COE NTC) பயிற்சியாளர்கள் தங்கள் பயின்ற செக்டாருடன் தொடர்புடைய தொழிற்பிரிவில் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருந்தால் அப்பிரிவில் தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    மூன்றாம் வகை (Category III) : ஆகஸ்ட் 2018-  வரை SCVT சேர்க்கை பெற்றவர்

    ஆகஸ்ட் 2018 வரை சேர்க்கை செய்யப்பட்ட மாநில தொழிற்பயிற்சி குழுமம் தொழிற்பிரிவு பயிற்சியாளர்கள் (SCUT) தனித்தேர்வராக விண்ணப்பிக்கலாம்.

    நான்கம் வகை (Category IV):  பிற விண்ணப்பதார்கள்

    a)  விண்ணப்பதாரர் அவர் விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் உச்ச வயது வரம்பு இல்லை

    b) தொழிற் பழகுநர் சட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தொழிர் சாலை சட்டம் 1948-ன் கீழ் செயல்பட்டு வரும் நிறுவனங்கள் மற்றும் அரசு / உள்ளாட்சி மன்றத்தில் பதிவு பெற்ற ஏதேனும் ஒன்றில் விண்ணப்பிக்கும் தொழில் பிரிவு தொடர்பான பணியில் மூன்று வருடம் முன் அனுபவம் பெற்றிருக்க வோண்டும்

    2) ஆகஸ்ட் 2019ம் ஆண்டு முதல் SCVT திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப் பெற்ற பயிற்சியாளர்கள் இந்த Category-IVன் படி தனித்தேர்வராக விண்ணப்பித்து NTC பெறலாம்.

    தனித் தேர்வராக தேர்வெழுத விரும்பும் விண்ணப்பதாரர் அத்தொழிற்பிரிவுக்குரிய குறைந்தபட்ச கல்வித்தகுதியினை பெற்றிருக்க வேண்டும்.

    தகுதியுள்ள I, II மற்றும் IV வகையைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு (இரண்டாம் வகையைத் தவிர) முதனிலைத் தேர்வுகள் கருத்தியல் (Theory) பாடத்தில் 11.10.2022 மற்றும் செய்முறை (Practical) தேர்வு 12.10.2022 ஆகிய தேதிகளில் கிண்டி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும். கருத்தியல் தேர்வு descriptive type-ல் இடம்பெறும்.

    இதையும் வாசிக்க: முதுகலை ஆசிரியர் விண்ணப்பதாரர்கள் தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யலாம்

    கருத்தியல் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமே செய்முறை தேர்வில் கலந்து கொள்ள இயலும். இதில் தேர்ச்சி பெறுபவர்கள் மற்றும் இரண்டாம் வகை விண்ணப்பதாரர்கள் மட்டுமே ஜூலை 2023-இல் நடைபெறவுள்ள அகில இந்திய தொழிற் தேர்வில் தனித்தேர்வராக (Private Candidates) கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். தொழிற் பிரிவிற்கு ஏற்ப அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு NCVT மூலம் தேசிய தொழிற் சான்றிதழ் (National Trade Certificate) வழங்கப்படும்.

    தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்க குறிப்பேடு (Prospectus), ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    அதற்கான தேர்வு கட்டணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in என்ற என்ற இணைய தளத்தின் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம்/ பாரத ஸ்டேட் வங்கியின் கருவூலக் கிளை வழியாகவோ e-Challan மூலம் செலுத்த வேண்டும்.

    இதையும் வாசிக்கநாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழங்கள் அறிவிப்பு.. பட்டங்கள் வழங்கவும் உரிமை இல்லை - யுஜிசி

    விண்ணப்பத்துடன் இணைய வழியாக தேர்வு கட்டணம் ரூ200/- செலுத்தியமைக்கான செலுத்துச் சீட்டு (e-Challan), கல்விச்சான்றிதழ் நகல் மற்றும் இதர ஆவணங்களின் நகல்கள் ஆகியவற்றினை இணைத்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 12.092022-க்குள் அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

    கடைசி தேதிக்குப் பின் பெறப்படும் விண்ணப்பபங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Employment and training department

    அடுத்த செய்தி