ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

புதிய பரிணாமம் எடுக்கும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்... வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

புதிய பரிணாமம் எடுக்கும் அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள்... வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்குமா?

காட்சிப் படம்

காட்சிப் படம்

Employment Exhange : தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில், வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் பணியமர்த்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 17% ஆக உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நாட்டின் மனிதவள அபிவிருத்தியில் வேலைவாய்ப்பு அலுவலங்களின் பங்களிப்பு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரண்டாம் உலகப் போரினால் பாதிக்கப்பட்ட படை வீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட இவ்வலுவலகம், நாடு விடுதலை அடைந்த பிறகு அனைத்து தரப்பு மக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டது.

1990 களில் இந்திய பொருளாதாரம் உலக மயமாக்கல், நவீனமயமாக்கல், தனியார்மயமாக்கல் என்ற செயற்பாடுகளுக்கு உட்பட்டது. இந்தசெயற்பாடு , நாட்டின் வேலையின்மைப் பிரச்சனை தீர்க்கும், பொருளாதாரத்தை முறை சார்ந்ததாக மாற்றும், தரமான மனிதவள ஆற்றலை உருவாக்கும் என்று திட்டமிடப்பட்டது. 

ஆனால், இந்தியா வளரும் நாடுகளில்  தனியார்மயமாக்கல் கொள்கை தலைகீழ் மாற்றங்களைதான் தந்தது. உதாரணமாக, 1999 முதல் 2004 வரை நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 5.6% ஆக இருந்த நிலையில், வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் வெறும் 2.4 விழுக்காடு மட்டுமே இருந்தது. அதேபோன்று, உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளில் பெரும்பாலும்  அமைப்புச் சாரா தொழில்  துறைகள் மூலம் மட்டுமே நடந்தேறியது. தற்போது, நாட்டில் பணிபுரியும் 90% உழைப்பாளர்கள் எந்தவித சமூக பாதுகாப்புமின்றி விளிம்பு நிலையில் உள்ளனர். இந்த காலகட்டத்தில் தான், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் பல்வேறு விமர்சங்களுக்கு உள்ளாக்கப்பட்டன. அதன்படி 2011-12 ஆண்டிற்குப் பிறகு தான், உயர்தரமான ஆக்கத்திறன் கொண்ட மனிதவளத்தை கட்டமையாக்கும் பணிகள் வேகமெடுக்கத் தொடங்கின. திறன் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம், STAR திட்டம், பிரதான் மந்திரி பயிற்சித் திட்டம் (PMKVY - பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா) போன்றவைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதையும் வாசிக்கநாட்டில் புதிய வேலைவாய்ப்பு குறைகிறதா... தரவுகள் சொல்வது என்ன?

அதேசமயம், வேலைவாய்ப்புகளை வழங்குவதில் அரசாங்கத்திற்குரிய பொறுப்பு முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. தேசிய வேலைவாய்ப்பும் இயக்கம் மூலம் (National Career Service Project) வேலை தேடும் இளைஞர்களையும், நிறுவனங்களையும் நேரடியாக இணைக்கும் முயற்சியை மத்திய / மாநில அரசுகள் மேற்கொள்ளத் தொடங்கின.

அதற்கேற்ப, அரசு வேலைவாய்ப்பு அலுவலங்கள், கடந்த 2019ம் ஆண்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களாக மாற்றம் செய்யப்பட்டன. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி இளைஞர்களது வேலை பெறும் திறனை உயர்த்துவதே  தற்போது வேலைவாய்ப்பு அலுவலகங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

வேலையின்மைப் பிரச்சனைக்கு தீர்வு? 

இருப்பினும், இந்த வேலைவாய்ப்பு முகாம் திட்டத்தின் கீழ், ஏற்கனவே வேலை வாய்ப்பில்லாத இளைஞர்கள் எந்தளவு நன்மைகளைப் பெற்றுள்ளனர் என்ற கேள்வியும் முக்கியத்துவம் பெறுகிறது.

2019 முதல் 2021 வரையிலான மூன்று ஆண்டுகளில், தமிழ்நாட்டில், 68,829 காலியிடங்களுக்கு 327 வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளன.  1,29,758 பேர் கலந்து கொண்ட நிலையில், 53, 257 பேர் முதல் சுற்றை முடித்துளள்னர். இவர்களில், இறுதியாக வேலைவாய்ப்பு கடிதம் பெற்றவர்கள் எண்ணிக்கை 37,782 ஆகும். அதாவது, வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டவர்களில் தோராயமாக 30% பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை வெறும் 18% ஆகும்.

இதையும் வாசிக்க: பிசினஸ் தொடங்குற ப்ளானா.? கொட்டிக்கிடக்கு வாய்ப்பு.. ஈசியா தொழில் தொடங்க முக்கிய தகவல்!

2021 ஜுலை முதல் 2022 நவமபர் 18ம் தேதி வரையிலான காலத்தில், 67 மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில், 4,84,250 பேர் பங்கு கொண்ட நிலையில், 82,563 பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அதாவது, பணியில் அமர்த்தப்படும் விகிதம் 17% ஆக உள்ளது. 

எனவே, மனிதவள நிரம்பல் மற்றும் தேவை (Demand & Supply) இரண்டிற்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நடவடிக்கை இங்கு முக்கியமானாதாகிறது. தொழிற்கல்வியின் மீதான முதலீடுகளை அதிகரிப்பது, பாடங்களை தொழிற்சார் கொள்கையுடன் ஒன்றிணைப்பது, தொழிற் தேர்ச்சி அளிக்கும் குறுகிய கால பயிற்சித் திட்டங்களை நவீனப்படுத்துவது  (பிரதான் மந்திரி கவுஷல் விகாஸ் யோஜனா) போன்ற செயற்பாடுகள் இந்த இடைவெளியை குறைக்கும் என்று கூறப்படுகிறது. 

First published:

Tags: Recruitment, Tamil Nadu Government Jobs