தமிழக அரசின் "இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், என் பள்ளி என் பெருமை" போன்ற பல்வேறு முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு கல்வி ஊக்கத்தொகை திட்டம் (Tamil Nadu Education Fellowship) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
பணியிடங்கள் :-
Senior Fellows |
38 |
ஏதேனும் ஒரு இளங்கலை படிப்பு |
மாத ஊதியம் - ரூ.45,000 |
|
Fellows |
114 |
ஏதேனும் ஒரு இளங்கலை படிப்பு |
மாத ஊதியம் - ரூ.32,000 |
|
Fellows:
முக்கியப் பணிகள்:
அரசின் முன்னோடித் திட்டங்களை செயல்படுத்த துணைபுரிய வேண்டும்.
திட்டங்களை சமுதாய அளவில் கொண்டு செல்வதற்கு பல்வேறு தொலைதொடர்பு உத்திகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை செயல்படுத்துவதற்கு துணை புரிய வேண்டும்.
அரசுப் பள்ளி தேவைகளை அடையாளம் காணுதல், கல்வித் தேவைகளை நிறைவேற்றுதல், கல்வித்தரத்தை உயர்த்துதல் போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் துணையுடன் உதவ வேண்டும்.
திட்டங்களை செம்மையாக செலுப்படுத்த மாவட்ட நிர்வாகட்டத்திற்கு உதவ வேண்டும்.
திட்டங்களின் பயன்களை தர்க்கரீதியாக, பகுத்தறிந்து நுண்ணாய்வு செய்யவேண்டும்.
தகுதி:
- தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- விண்ணப்பம் செய்யும் காலம்: ஏப்ரல் 22, முதல் ஜூன் 15, 2022 வரை
- பணிக்காலம்: ஜூலை 2022 முதல் ஜூன் 2024வரை
- • தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும், மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.
- பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.
Senior Fellows:
விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல், திட்ட ஆய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்தல், திட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான பயிலரங்கை ஏற்பாடு செய்தல், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு டிஜிட்டல் கருவிகள் மூலம் உதவுதல் போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும்.
தகுதி:
- இளங்கலை (அல்லது) தொடர்புடையை துறைகளில் முதுகலை நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.
- குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- தமிழ் மொழியில் சரளமாக பேச, எழுத, படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும்.
- சமூக ஊடங்களைப் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.
- விண்ணப்பம் செய்யும் காலம்: ஏப்ரல் 22, முதல் ஜூன் 15, 2022 வரை
- பணிக்காலம்: ஜூலை 2022 முதல் ஜூன் 2024வரை
- • தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும், மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.
- பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.