ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: வெளியானது அரசாணை!

எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: வெளியானது அரசாணை!

அங்கன்வாடி மையம்

அங்கன்வாடி மையம்

இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில்  LKG மற்றும் UKG  நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தும், 2381 தற்காலிக  சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பானஅரசாணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

  இல்லம் தேடிக் கல்வித்' திட்டத்தில் பணிபுரியும் தகுதி வாய்ந்த தன்னார்வலர்களை மழலையர் வகுப்புகள் இயங்கும் பள்ளியின் பள்ளி மேலாண்மைக் குழுவே தேர்ந்தெடுத்து தற்காலிக ஆசிரியராக நியமிக்கலாம் என்றும்  இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தகுதி வாய்ந்த நபர் இல்லாத போது தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தேர்ச்சி பெற்ற பிற நபர்களை நியமனம் செய்யலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க:  கல்விக்கடன் வாங்கி இருக்கீங்களா? ரெப்போ வட்டி விகிதம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க!

  இவர்களது பணி முழுக்க முழுக்க தற்காலிகமானது. இச்சிறப்பாசிரியர்களுக்கு பிழைப்பூதியம் ரூ.5000 மேலாண்மைக்குழு மூலம் மாதம் தோறும் வழங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

  Published by:Salanraj R
  First published:

  Tags: Govt teachers, LKG, Teachers, UKG