தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை...

மொழி புரியாமல் பணியாற்றும் வடமாநிலத்தவர்களால் மின் நுகர்வோர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வெளிமாநிலத்தவர்களுக்கு வேலை...
மின்வாரியம்
  • Share this:
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் பணியிடங்களில் வெளி மாநிலத்தவர்கள் 37 பேர் நியமிக்கப் பட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தேர்வில் 45 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

இதில், தேர்வான 325 பேருக்கு பணி நியமன ஆணை நேற்று முன்தினம் வழங்கப்பட்ட நிலையில், அவர்களில் 37 பேர் ஆந்திரா, உத்திரபிரதேசம், பீகார், கர்நாடகா, ராஜஸ்தான், தில்லி, சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.


தமிழ் மொழி தெரிந்திருக்காத பட்சத்தில் பணியில் சேர்ந்து 2 வருடங்களுக்குள் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் என்ற விதி உள்ளதால் இவர்கள் தகுதி பெற்றுள்ளனர். அதேசமயம், தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் வடமாநிலத்தவர் அதிகளவு பணியில் அமர்த்தப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசின் கீழ் உள்ள மின்சார வாரியத்தில் வெளிமாநிலத்தவர்கள் 12 சதவீதம் பேர் இடம்பெற்றிருப்பது பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வைகோ எதிர்ப்பு:

தமிழகத்தில் 90 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் போது வெளிமாநிலத்தவரை இங்கு பணியில் அமர்த்தியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறியுள்ள மதிமுக பொதுசெயலாளர் வைகோ, மத்திய பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை போன்று அந்தந்த மாநிலத்தவர்களுக்குத் தான் அரசு பணி என தமிழக அரசும் சட்டம் இயற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.மொழி புரியாமல் பணியாற்றும் வடமாநிலத்தவர்களால் மின் நுகர்வோர்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

தமிழக அரசுப்பணி...விண்ணப்பிக்க என்ன தகுதி?

தமிழகத்தை சேர்ந்தவர்களை தவிர, மற்றவர்கள் தமிழக அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும் .  இந்தியாவில் நிரந்தரமாக குடியமரும் நோக்கத்தில், 1962 ஜனவரி ஒன்றாம் தேதிக்கு முன்பு திபெத்திலிருந்து, இந்தியாவுக்கு வந்த அகதிகளாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் தகுதிச்சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

தமிழ் மொழி தெரியாத ரயில்வே அதிகாரியால் மதுரை மாவட்டம் திருமங்கலம்-கல்லிக்குடி வழித்தடத்தில் ஒரே தண்டவாளத்தில் எதிரெதிரே இரண்டு ரயில்கள் மோத இருந்த சம்பவம் கடைசி நேரத்தில் தவிர்க்கப்பட்டது. எனவே, இதுபோன்று முக்கியத்துவம் வாய்ந்த பணிகளில் வேலைவாய்ப்பாக மட்டும் பார்க்காமல் மொழிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருந்து வருகிறது.
First published: May 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்