தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் பல்வேறு காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதியாகும். எனவே, தேர்வர்கள் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
காலியிடங்கள்: 78 இடங்கள்
மாநில இயக்க மேலாண்மை அலகு (State Management mission Unit) - 1
தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டம் (NRETP): 6
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (TNSRLM): 11
தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDUGKY) : 2
தமிழ்நாடு மாநில வழங்கல் மற்றும் சந்தைப்படுத்தல் சங்கம் (TNSSMS) : 3
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு : 55
இதர விவரங்கள்: பதவி வாரியான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை சம்பள விதிகள் ஆகியவை தமிழ்நாடு மகளரி வாரிய அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பம் செய்வது எப்படி: இதற்கான விண்ணப்பங்களை https://tncdw.tnmhr.com/Landing.aspx இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2022 ஆகும்.
இதையும் வாசிக்க: TNPSC Annual Planner 2023: குரூப் 1 தேர்வு உண்டு .... குரூப் IV அறிவிப்பில் மாற்றமில்லை
தெரிவு முறை: எழுத்துத் தேர்வு மூலம் தெரிவு முறை இருக்கும். அனைத்து பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு ஒரே நாளில் நடைபெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பித்தாலும், ஏதேனும் ஒரு பதவிக்கு மட்டும் எழுத்துத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.