ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

6503 ரேஷன் கடை காலியிடங்கள்: இன்றே கடைசி நாள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

6503 ரேஷன் கடை காலியிடங்கள்: இன்றே கடைசி நாள்... விண்ணப்பம் செய்வது எப்படி?

ரேஷன் கடை

ரேஷன் கடை

12 தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளர்கள்  பதவிக்கும், 10 தேர்ச்சி பெற்றவர்கள் கட்டுநர்கள் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  அனைத்து மாவட்டங்களிலும் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலைக் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (salesmen) மற்றும் கட்டுநர்கள் (Packers) பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை  இன்றுடன் முடிவடைகிறது.

  12 தேர்ச்சி பெற்றவர்கள் விற்பனையாளர்கள்  பதவிக்கும், 10 தேர்ச்சி பெற்றவர்கள் கட்டுநர்கள் பதவிக்கும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எந்தவித  எழுத்துத் தேர்வும் இல்லாமல் நேரடியாக நியமனம் செய்யப்படுகிறது. புதிதாக வேலைதேடும் ஆண்கள், பெண்கள் காலதாமதமின்றி உடனடியாக விண்ணப்பிக்குமாறு  கேட்டுக் கொள்ளப்படுகிறது.

  6503 காலிப் பணியிடங்கள் விண்ணப்பம் செய்வது எப்படி? 

  காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட மாவட்ட கூட்டுறவு சங்க வேலைவாய்ப்பு இணையதளத்திற்கு செல்லவும்.

  மாவட்டம்பணியிடங்கள்ஆன்லைன் லிங்க்
  1கோயம்புத்தூர்233https://www.drbcbe.in/
  2விழுப்புரம்244https://www.drbvpm.in/
  3விருதுநகர்164https://www.vnrdrb.net/
  4புதுக்கோட்டை135https://www.drbpdk.in/
  5நாமக்கல்200https://www.drbnamakkal.net/
  6செங்கல்பட்டு178https://www.drbcgl.in/
  7ஈரோடு243https://www.drberd.in/
  8திருச்சி231https://www.drbtry.in/
  9மதுரை164https://drbmadurai.net/
  10ராணிப்பேட்டை118https://www.drbrpt.in/
  11திருவண்ணாமலை376http://drbtvmalai.net/
  12அரியலூர்75https://www.drbariyalur.net/
  13தென்காசி83https://drbtsi.in/
  14திருநெல்வேலி98https://www.drbtny.in/
  15சேலம்276https://www.drbslm.in/
  16கரூர்90https://drbkarur.net/
  17தேனி85https://drbtheni.net/
  18சிவகங்கை103https://www.drbsvg.net/
  19தஞ்சாவூர்200http://www.drbtnj.in/
  20ராமநாதபுரம்114http://www.drbramnad.net/
  21பெரம்பலூர்58https://www.drbpblr.net/
  22கன்னியாகுமரி134http://www.drbkka.in/
  23திருவாரூர்182https://www.drbtvr.in/
  24வேலூர்168http://drbvellore.net/
  25மயிலாடுதுறை150https://www.drbmyt.in/
  26கள்ளக்குறிச்சி116https://www.drbkak.in/
  27திருப்பூர்240https://www.drbtiruppur.net/
  28காஞ்சிபுரம்274https://www.drbkpm.in/
  29கிருஷ்ணகிரி146https://drbkrishnagiri.net/
  30சென்னை344https://www.drbchn.in/
  31திருப்பத்தூர்75https://drbtpt.in/
  32திண்டுக்கல்310https://www.drbdindigul.net/
  33நாகப்பட்டினம்98https://www.drbngt.in/
  34திருவள்ளூர்237https://www.drbtvl.in/
  35தூத்துக்கடி141ht tps://www.drbtut.in/
  36நீலகிரி76https://www.drbngl.in/
  37கடலூர்245https://www.drbcud.in/
  38தர்மபுரி98https://www.drbdharmapuri.net/

  முதலில், Salesman, Pacekers என காலிப்பணியிடங்களுக்கான ஆதித்திரிவடைர் விருப்பத்தை தேர்வு செய்யுங்கள்

  காலிப்பணியிடங்களுக்கு அப்ளை செய்த பிறகு,  விண்ணப்பக் கட்டணம் ஏற்கனவே செலுத்தப்பட்டு விட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்று பதில் அளிக்கவும்.

  SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம்  விண்ணப்பக் கட்டண செலுத்தலாம்

  (அல்லது)

  உங்கள் மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தலாம்

  SBI Collect (Pay Using SBI Collect) என்ற சேவையைக் கிளிக் செய்யுங்கள்

  www.onlinesbi.sbi/sbicollect/icollecthome.htm என்ற திரைக்கு அழைத்து செல்லப்படுவீர்கள். அதில், I have read என்பதை கிளிக் செய்து Proceed பட்டனை அழுத்துங்கள்.

  State Of Corporate/Institution என்பதில் 'Tamil Nadu' -ஐ தேர்வு செய்யுங்கள்

  Type of Corporate/Institution என்பதில் 'Recrutiment' - ஐ தேர்வு செய்யுங்கள்.

  Recruitment Name என்பதில் உங்கள் மாவட்ட கூட்டுறவு சங்க  வேலைவாய்ப்பு  அமைப்பை கிளிக் செய்யுங்கள் (உதாரணமாக - District Recruitment Bureau Thiruvallur)

  Select payment Category-ல் நீங்கள் விண்ணப்பிக்க விரும்பும் பதவியை தேர்வு செய்யுங்கள் (Packers, Salesmens)

  பெயர்,பிறந்த தேதி, முகவரி உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பியுங்கள்.

  SBI Online அல்லது இதர் வங்கி சேவைகள் மூலம் மூலம் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.

  பிறகு, செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

  ஆன்லைன் சேவையை பயன்படுத்த முடியவில்லை என்றால், நீங்கள் நேரடியாக  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் பணத்தை செலுத்தலாம்.

  இதையும் வாசிக்க தமிழ் வழியில் பயின்றவர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சாதிக்கின்றனரா? தரவுகள் சொல்வது என்ன?

  யார் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை: ஆதிதிராவிடர், பழங்குடியினர், அனைத்து பிரிவினரையும் சார்ந்த மாற்றுத் திறனாளிகள், அனைத்துப் பிரிவினரையும் சேர்ந்த ஆதரவற்ற விதவைகள் விண்ணப்பக்  கட்டணம் செலுத்த தேவையில்லை.

  விண்ணப்பக் கட்டணம் செலுத்திய பிறகு, உங்கள் சுயவிவரக் குறிப்பை நிரப்புங்கள். 

  பிறகு, கீழ்காணும் ஆவணங்களை பதிவேற்றம் செய்யுங்கள்:

  புகைப்படம் -50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format).

  கையெழுத்து - 50 kb அளவுக்கு மிகாமல் (jpeg or jpg format)

  சாதிச் சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல்(pdf file)

  குடும்ப அட்டை - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) (அல்லது)

  வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (pdf file)

  SBI Collect" என்ற சேவையைப் பயன்படுத்தி Online மூலம் செலுத்தப்பட்ட விண்ணப்பக் கட்டண ரசீது செலுத்தியிருப்பின் அந்த ரசீது (pdf file)

  (அல்லது)

  மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் நேரடியாக செலுத்தியிருப்பின் (DRB Copy of the pay-in-slip) பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் - 100 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file) 10.

  ஏற்கனவே 2020-ஆம் ஆண்டு விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் இந்தமுறை விண்ணப்பிக்கும் போது கடந்த முறை அளித்த விண்ணப்ப நகல் / வங்கி செலான் / நேர்முகத் தேர்விற்கு அனுப்பப்பட்ட அழைப்பு கடிதம் இவற்றில் ஏதேனும் ஒன்று 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  முன்னுரிமை கோரும் இனத்திற்கான/ இனங்களுக்கான சான்றிதழ் - 200 kb அளவுக்கு மிகாமல் (pdf file)

  PDF size குறைக்க adobe.com  என்ற  இணைப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs