ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சந்தை மேலாளர் பணி: ரூ.50,000 வரை சம்பளம்

கோ - ஆப்டெக்ஸ் நிறுவனத்தில் சந்தை மேலாளர் பணி: ரூ.50,000 வரை சம்பளம்

சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும். ஆடைத் தொழில் குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்

சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும். ஆடைத் தொழில் குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்

சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும். ஆடைத் தொழில் குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாடு  அரசு சார்பு நிறுவனமான கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் நிறுவனம் ( TN Handloom Weaver Co-operative Society Limited) ஒப்பந்த அடிப்படையில் சந்தையியல் மேலாளர் ( Marketing Manager) பணியிடத்தை நிரப்புவதாக அறிவித்துள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  பணி விவரம்: சந்தையியல் மேலாளர் (Marketing Manager)

  பணியிடங்கள்: 11

  சென்னை, கடலூர், கோயம்புத்தூர், மதுரை, செலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரூ, மும்பை, விஜயவாடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள  சந்தை நிலையங்களில் பணியமர்த்தப்படுவர்.

  சம்பள விவரம்: மாதம் ரூ.50,000 ஊதியமாக வழங்கப்படும்

  கல்வித் தகுதி: சந்தைபடுத்துதல் பாடநெறியில் எம்பிஏ முதுநிலை பட்டம்  பெற்றிருக்க வேண்டும். ஆடைத் தொழிலில் குறைந்தது 5 ஆண்டுகள் முன்அனுபவம் இருக்க வேண்டும்.

  பணி காலம்: ஓராண்டு

  வயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர்  15.9.2022 அன்று  வயது 33- க்கு கீழ் இருக்க வேண்டும்.

  தெரிவு முறை: நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.

  நேர்முகத்தேர்வு நடைபெறும்  நாள் மற்றும் நேரம்: 28-09-2022, காலை - 11 மணி

  நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்:

  Co-optex Head Office,

  No.350, Pantheon Road,

  Egmore, Chennai - 600 008.

  இதையும் வாசிக்க: விரிவுபடுத்தப்படும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை : வேலைவாய்ப்பு நிலவரங்கள் என்ன?

  கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் என்பது ஒரு வணிக நிறுவனமாகும். தமிழ்நாட்டில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் ஏழை நெசவாளர்கள் தயாரிக்கும் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரம் உயரவும் மற்றும் அவர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர் வேலை வாய்ப்பினை உருவாக்க ஏற்படுத்தப்பட்ட நிறுவனமாகும்

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment