Home /News /employment /

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வேலை

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்விச் சான்று , சாதிச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் புகைப்படத்துடன் ஆண் விண்ணப்பத்தார்கள் நேரில் வர வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம், திருப்பூர் மண்டலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பருவகால பட்டியல் எழுத்தர் ( குறைந்த பட்ச மாத ஊதிய விகிதம் ரூ. 2410 + அகவிலைப் படி ) மற்றும் பருவகால காவலர் ( குறைந்தபட்ச மாத ஊதிய விகிதம் ரூ. 2359 + அகவிலைப்படி ) நிலையில் பணிபுரிய, எதிர்பார்க்கப்படும் பருவகால காலிப்பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்விச் சான்று , சாதிச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் புகைப்படத்துடன் ஆண் விண்ணப்பத்தார்கள் நேரில் வர வேண்டும்.

    கல்வித்தகுதி :

    பருவகால பட்டியல் எழுத்தர் பணிக்கு அறிவியல் இளநிலை படிப்பாகிய B.SC ( Botany , Zoology , Chemistry ) ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவை முதன்மை பாடமாக படித்து பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்.

    பருவகால காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

    இடம் : மண்டல அலுவலகம், கட்டிட எண். 27 & 36, ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில் , பல்லடம் ரோடு , திருப்பூர் - 641 604. தொலைபேசி எண் : 0421 - 2217627 , 2217616

    நேரம் : பருவகால பட்டியல் எழுத்தர் - 22/12/2021 காலை 11 மணி

    பருவக்கால காவலர் - 23/12/2021 காலை 11 மணி

    வயது விவரம் :

    ஆதிதிராவிடர் , ஆதிதிராவிடர் (அருந்ததியர்) , பழங்குடியின வகுப்பினர் - 18 முதல் 37 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

    மிகவும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் , சீர்மரபினர் , பிற்படுத்த பட்ட வகுப்பினர் மற்றும் பிற்படுத்த பட்ட வகுப்பினர் முஸ்லீம் - 18 முதல் 34 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்

    இதர வகுப்பினர் - 18 முதல் 32 வயதுக்குள் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி