Home /News /employment /

TNPSC Group -1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

TNPSC Group -1 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வு

டிஎன்பிஎஸ்சி குரூப் I தேர்வு

சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்க இருக்கும் இலவச பயிற்சி வகுப்பில் குரூப் I போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    சென்னை தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 தேர்வுக்கான கட்டணமில்லா நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. நாளை மறுநாள் தொடங்கும் இந்த பயிற்சி வகுப்பில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர் உள்ளிட்ட 6 வகையான குரூப் 1 பணிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான, ஆன்லைன் விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. வரும் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வர்களுக்கு பயன்படும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின்  கீழ், சென்னை, கிண்டியில் இயங்கி வரும் மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளை அறிவித்துள்ளது. குரூப் I போட்டித் தேர்விற்கு விண்ணப்பித்தவர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    இதையும் வாசிக்க:  அகவிலைப்படி யாருக்கெல்லாம் உயர்த்தி வழங்கப்படும்? தமிழக அரசு விளக்கம்

    நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டிய முகவரி:

    மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையம் எ-28 முதல் தளம்,
    டான்சி தலைமை அலுவலக கட்டிட வளாகம்,
    திரு.வி.க தொழிற்பேட்டை,
    கிண்டி,
    சென்னை –600032

    மேலும் விவரங்களுக்கு 93615 66648, 80725 84856 என்ற தொலைபேச எண்கள் வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: TNPSC

    அடுத்த செய்தி