ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சுய உதவிக் குழுக்கள் தொழில் அமைக்க பயிற்சி: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சுய உதவிக் குழுக்கள் தொழில் அமைக்க பயிற்சி: நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்ட தமிழக அரசு

சுய உதவிக் குழு

சுய உதவிக் குழு

Self Help Groups: இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் பேக்கஜிங் (I I P) போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யவும், சேவை சார்ந்த தொழில்கள் அமைக்கவும் பயிற்சி வழங்கப்படும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழகத்தில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி செய்து விற்பனை செய்திட பயிற்சிகள் வழங்கப்படும் என்று 2022- 23 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தைன் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிவித்திருந்தார்.

  இந்நிலையில், இந்த அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் பொருட்டு ரூ. 2 கோடியே 50 லட்சம் நிதி ஒத்துழைப்பு வழங்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

  இத்திட்டத்தின் கீழ், மாநிலத்தில் 2000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மத்திய பிளாஸ்டிக் பொறியில் மற்றும் தொழில்நுட்பக் கழகம் (CIPET), தேசிய நவீன ஆடை வடிவமைப்பு நிறுவனம் (N I F T),  மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் (C L R I), மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் (C F T R I), நெட்டூர் தொழில்நுட்ப பயிற்சி மையம் (N T T F), இந்தியன் இன்ஸ்ட்யூட் ஆப் பேக்கஜிங் (I I P) போன்ற அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பொருட்கள் உற்பத்தி செய்யவும், சேவை சார்ந்த தொழில்கள் அமைக்கவும் பயிற்சி வழங்கப்படும்.

  இதையும் வாசிக்க: 

  சேலத்தில் அரசு வேலை.. ₹30000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ...     

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment