ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

2748 கிராம உதவியாளர் காலியிடங்கள்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

2748 கிராம உதவியாளர் காலியிடங்கள்: வெற்றி வாய்ப்பு யாருக்கு அதிகம்?

காட்சிப் படம்

காட்சிப் படம்

Village Asisistant Jobs Marking Scheme: 9ம் வகுப்பு வரை தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 5 மதிப்பெண்களும், உயர்கல்வி பெற்ற மாணவர்களுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.  

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  தமிழ்நாட்டில் 16,000க்கும் மேற்பட்ட வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை கடந்த 7ம் தேதியுடன் முடிவடைந்தது.

  எழுத்துத் தேர்வு, வண்டி ஓட்டும் திறன், திறனறிதல் திறன், இருப்பிடம், நேர்காணல் ஆகியவற்றில் பெரும் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.  லஞ்சம், ஒருசார்புத்தன்மை, பாரபட்சம் ஆகியவற்றை தவிர்ப்பதற்காக நேர்காணல் தேர்வுக்கு உயர் அளவு மதிப்பெண் வெறும் 15 ஆக நிர்ணயிக்கப்பட்டுளளது.

  கல்வித்தகுதி உயர் அளவு மதிப்பெண் 10 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  9ம் வகுப்பு வரை தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு 5 மதிப்பெண்களும், உயர்கல்வி பெற்றவர்களுக்கு அதிகபட்சமாக 10 மதிப்பெண்களும் வழங்கப்படும்.

  கல்வித் தகுதிமதிப்பெண்கள்
  9ம் வகுப்பு வரை தேர்ச்சி5
  12ம் வகுப்பு/டிப்ளமோ/ஐடிஐ தேர்ச்சி7
  இதர உயர்கல்வி மேற்படிப்புகளுக்கு10

  மிதிவண்டி ஓட்டும் திறன் - உயர் அளவு மதிப்பெண் - 10 

  மிதிவண்டி ஓட்டும் திறன்5 மதிப்பெண்
  இரண்டு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால்7 மதிப்பெண்
  நான்கு சக்கர வாகன உரிமை வைத்திருந்தால்10 மதிப்பெண்

  திறனறிதல் தேர்வில் உயர் அளவு மதிப்பெண் - 40 

  வாசித்தல் திறன் (எந்த ஒரு புத்தகத்திலும் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள வாசகங்களை விண்ணப்பதாரரை வாசிக்கச் சொல்லலாம்)10 மதிப்பெண்
  எழுத்து தேர்வு:   ஏதேனும் தலைப்பு பற்றி 100 வார்த்தைக்கு மிகாமல் கட்டுரை எழுத செய்யலாம்30 மதிப்பெண்

  இருப்பிடம்: உயர் அளவு மதிப்பெண் 25

  விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கும் கிராம வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால்25
  விண்ணப்பிக்கும் தாலுகா வட்ட எல்லைக்குள் நிரந்தரமாக வசிப்பவராக இருந்தால்20

  நேர்காணல் தேர்வு : உயர் அளவாக 15 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

  இதையும் வாசிக்க:  பெண்களுக்கான வேலைவாய்ப்பு.. ரூ.20,000 வரை மாதச் சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

  எனவே, தேர்வர்கள் தங்களது கல்வித் தகுதி, இருப்பிடம் உள்ளிட்ட அசல் சாண்றிதழ்களை மாவட்ட நிர்வாகம் கோரும் போது தாக்கல் செய்ய வேண்டும். கேட்கப்படும் அசல்  சான்றிதழுக்கு 45% மதிப்பெண்களும், திறனறிதல் மற்றும் நேர்காணல் தேர்வுக்கு 55% மதிப்பெண்களும்  கொடுக்கப்பட உள்ளன. எனவே, விண்ணப்பதாரகள் 55% மதிப்பெண்களுக்கு தேவையான உழைப்பை செலுத்தினால் போதுமானது.

  இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் தேர்வுக்கான சிலபஸ் என்ன... எப்படி தயாராகுவது?

  Published by:Salanraj R
  First published:

  Tags: Tamil Nadu Government Jobs