ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தாட்கோ SEPY திட்டம்: நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்... திட்டமிட்டே வங்கிகள் புறக்கணிக்கிறதா?

தாட்கோ SEPY திட்டம்: நிராகரிக்கப்படும் விண்ணப்பங்கள்... திட்டமிட்டே வங்கிகள் புறக்கணிக்கிறதா?

தாட்கோ

தாட்கோ

31.7.2022 வரை வங்கிகளில் நிலுவையில் உள்ள தாட்கோ விண்ணப்பங்கள் (பல்வேறு திட்டங்களின் வாயிலாக)  எண்ணிக்கை  மட்டுமே 10,962   ஆக உள்ளன.  

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சுய தொழில் செய்வதை  பொருளாதார ரீதியாக ஊக்குவிக்க தொடங்கப்பட்ட  தாட்கோவின் இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்புத் திட்டத்தில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

இந்திய அரசியலமைப்புச் சட்ட பிரிவுகள்  15, 16, 17, 46 நாட்டின் தீண்டாமையை  ஒழிப்பதுடன், பட்டியலின மக்களின் உரிமைகளை  நிலை நாட்டுகின்றன. வரலாற்று ரீதியான அநீதியின் விளைவை சரிசெய்ய மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பட்டியலின மக்களுக்கு 15% இடஒதுக்கீடு  வழங்கப்பட்டு வருகிறது.  மேலும், அம்மக்களின் சமூக ரீதியிலான சமத்துவத்தை நிலை நிறுத்தும் வகையில் மத்திய/மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (TAHDCO) செயல்படுத்தும் Self Employment Programme for Youth (SEPY) திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படுவதும்,  பயனாளிகளின் நலன்களை அரசு, தாட்கோ, பொதுத் துறை வங்கிகள் பொறுப்புணர்வில்லாமல் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது. தாட்கோவின் திட்டம் தொடங்கப்பட்டதன் நோக்கம், பின்பற்ற வேண்டிய விதிமுறைகள், எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தாட்கோவின்  இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்புத் திட்டம்:

படித்த, வேலையற்ற அல்லது குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் ஆதி திராவிட இளைஞர்கள்  இத்திட்டத்தின் கீழ் மானியம் மற்றும் கடன் உதவி பெற்று தங்களுக்கு தெரிந்த விருப்பமான தொழிலை மேற்கொள்ளலாம். இத்திட்டத்தை கீழ், ஒவ்வொரு விண்ணப்பதாரர்க்கும் அதிகபட்சமாக 30% அல்லது ரூ.2.25 இலட்சம் இதில் எது குறைவானதோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது.  18 முதல் 35 வயதிற்குள்ளான, ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கும் மிகாமல் இருக்கும் இளைஞர்கள் இத்திட்டத்தை கீழ் பயன்பெறலாம்.

பயனாளிகள் விவரம்: 

ஆண்டுவிண்ணப்பங்கள் சமர்ப்பிப்புபுறக்கணிக்கப்பட்ட விண்ணப்பங்கள்தாட்கோ மானியம் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள்வங்கி கடன் பெற்ற விண்ணப்பங்கள்
201631222,393676647
201743412,98912141184
201842732,98610801046
201942212,73311351097
202046412,27213251143
202159742,8351191604
2022 (நடப்பாண்டு)57972,655280249 (1172 விண்ணப்பங்கள் செயல்முறையில் உள்ளன )

தரவுகள்: தாட்கோ இணையதளம்.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பங்களை, விண்ணப்பித்தார் முதலில் இணையதளத்திலேயோ அல்லது மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். மாவட்ட மேலாளர்களால் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து மாவட்ட அளவிலான கீழ்கண்ட அலுவலர்களைக் கொண்ட தேர்வுக் குழு விண்ணப்பதாரர்களைத் தெரிவு செய்யும். பின்னர், இந்த விண்ணப்பங்கள் வங்கிகளுக்கு செல்லும். வங்கிகளிடம் இருந்து form-III சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு தாட்கோ மானியத் தொகையை விடுவிக்கும். அதன் பின், கடன் தொகை ஒப்புதல் அளிக்கப்பட்டு கடன் தொகை விடுவிக்கப்படும் இதுதான் நடைமுறை.

இதையும் வாசிக்க: எஸ்எஸ்சி 4500 காலியிடங்கள்: இரண்டே மாதங்களில் தேர்வை கிராக் செய்வது எப்படி?

ஆனால், மாவட்ட தேர்வுக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கும் போக்கு வங்கிகளிடம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், 2018ல் மாவட்டக் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டு வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட 2502 விண்ணப்பங்களில், 1291 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல நடப்பாண்டில், பெறப்பட்ட 5797 விண்ணப்பங்களில், 991 விண்ணப்பங்கள் ஆரம்பக் கட்டத்திலும், 1604  விண்ணப்பங்கள் மாவட்ட அளவிலான தேர்வுக் குழுவினாலும், 60 விண்ணப்பங்கள் வங்கிகளாலும் நிராகரிக்கப்பட்டுள்ளன.  

மேலும், தாட்கோ நிறுவனத்திடம் இருந்து மானியத் தொகை பெற்றபிறகும் கூட, வங்கிகள் கடன் உதவியை  வழங்காமல் இருந்து வருகின்றன. உதாரணமாக, 2021ல்  1191 விண்ணப்பதாரர்களுக்கான மானியத் தொகையை தாட்கோ நிறுவனம் வங்கிகளுக்கு செலுத்தியுள்ளது. ஆனால், அந்தாண்டு வெறும் 604 விண்ணப்பங்களுக்கு மட்டுமே வங்கிக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறது.

சமூக ஆர்வலர்கள் எழுப்பும் கேள்விகள்?  

1.  மாவட்ட வாரியாக தகுதி வாய்ந்த பயனாளிகளின் பட்டியலை தாட்கோ கொண்டுள்ளதா?

3. 31.7.2022 வரை வங்கிகளில் நிலுவையில் உள்ள தாட்கோ விண்ணப்பங்கள் (பல்வேறு திட்டங்களின் வாயிலாக)  எண்ணிக்கை  மட்டுமே 10,962   ஆக உள்ளன. எனவே ரூ.10 லட்சம் வரை வங்கிகளில் கடனுதவி பெற அடமானம் தேவையில்லை என்ற இந்திய ரிசர்வ் வங்கியின்  நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறாதா?  விண்ணப்பங்களை பொதுத் துறை வங்கிகள்  நிராகரிக்க காரணம் என்ன?

3.  திட்டம் தொடர்பான விழிப்புணர்வு முகாமை ஏன் தாட்கோ  முன்னின்று செயல்படுத்தக் கூடாது?  ( விண்ணப்பம் செய்வது எப்படி? திட்ட அறிக்கையை தயார் செய்வது எப்படி? சிறந்த தொழிலை தெரிவு செய்வது எப்படி)

4. திட்டப் பயனாளிகள் வருவாய் ஈட்டி வாழ்க்கையில் முன்னேற்றம் அடைகின்றனர் என்பதற்கான தகவல்களை தாட்கோ கொண்டுள்ளதா?

5. மாவட்ட அளவிலான தேர்வுக் குழு எத்தனை  நாட்களுக்குள் விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்? எதன் அடிப்படையில் நிராகரிக்க வேண்டும்? என்பதற்கான பொதுவான வழிகாட்டு நெறிமுறைகளை தாட்கோ வெளியிட்டுள்ளதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக எழுப்புகின்றனர்.

மேலும் தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்படாமல், பயனாளிகளின் நலன்களை அரசு, தாட்கோ, பொதுத் துறை வங்கிகள் தனிப்பொறுப்புணர்வுடன் பாதுகாத்தல் வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கின்றனர்.

First published:

Tags: Employment, Entrepreneurship, SC