Home /News /employment /

100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்: ஹோட்டல் மேலாண்மை பட்ட படிப்புக்கு தாட்கோ அழைப்பு

100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்: ஹோட்டல் மேலாண்மை பட்ட படிப்புக்கு தாட்கோ அழைப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000/- முதல் ரூ.35,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/ வரை ஊதியமாக பெறலாம்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    உலகளவில் புகழ்பெற்ற Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனத்தில், B.Sc பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்  படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) அறிவித்துள்ளது.

    இந்த படிப்பின் மூலம் நாட்டின் உயர்தர இடங்களில் நூறு சதவீதம் வேலைவாய்ப்பு பெற்றிட ஏற்பாடு செய்யப்படும் என்றும், படிப்புக்கான கட்டண தொகையை கல்விக் கடனாக வழங்கும் என்றும் தாட்கோ கழகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை தரமணியிலுள்ள Institute Of Hotel management Catering Technology & Applied Nutrition நிறுவனமானது ISO தரச் சான்று பெற்ற நிறுவனமாகும். இந்நிறுவனமானது மத்திய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம். மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது.

    American Council Of Business -ல் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. France நாட்டில் உள்ள  Lycee Nicolas Appert Catering நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. Hotel Management Institute Survey 2021-ன் படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2வது இடம் பெற்றுள்ளது. CEO WORLD MAGAZINE நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் (Hospitality & Hotel Administration) உலக தர வரிசையில் மொத்தம் 100 நிறுவனங்களில் 14 வது இடத்தில் இடம் பெற்றுள்ளது.

    இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ / மாணவியருக்கு B.Sc. (Hospitality & Hotel Administration) மூன்று வருட முழு நேர பட்டபடிப்பும், ஒன்றறை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு (Diploma in Food Production) பட்டயப் படிப்பும், மேலும் 10ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்களுக்கு ஒன்றறை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் படிப்பும், கைவினைஞர் (Craftmanship Course in Food Production & Patisserio) பற்றிய படிப்பும் படிக்கலாம்.

    இதையும் வாசிக்க: சென்னை ஐஐடி-யின் டேட்டா சயின்ஸ் படிப்பில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவித்தொகை - தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

    படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர்தர உணவகங்கள் போன்ற இடங்களில் நூறு சதவீதம் வேலை வாய்ப்பு பெற்றிடவும் தாட்கோ ஏற்பாடு செய்துள்ளது. இப்படிப்புக்கான கட்டண தொகையை தாட்கோ கல்விகடனாக வழங்கும்.

    இதற்கான, தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ /மாணவிகள் 12, மற்றும் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 28 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: தாட்கோ கழகம் செயல்படுத்தும் முக்கியத் திட்டங்கள் என்ன?

    ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ25,000/- முதல் ரூ.35,000/-வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000/- முதல் ரூ.70,000/ வரை ஊதியமாக பெறலாம். இப்படிப்பில் விண்ணப்பம் செய்ய www.tahdco.com என்ற இணையதள முகவரியில் வரும் 14.09.2022 க்குள் பதிவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Jobs

    அடுத்த செய்தி