ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தற்போதைய வேலைவாய்ப்பு சந்தையில் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகளை ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தாட்கோ மூலம் தேர்வு செய்யப்படும் 100 ஆதி திராவிடர் இளைஞர்களுக்கு நிதி மேலாண்மை (Financial Management), காப்பீடு (Insurance) மற்றும் வங்கிச் சேவை (Banking) போன்ற நிதி சார்ந்த தொழில்களில் பயிற்சி அளிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மேற்காணும் பயிற்சி பெற விருப்பும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்கள் www.tahdco.com (IBPS Exam Training) என்ற இணையதளத்தில் சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், கடைசியாக நடைபெற்ற செமஸ்டர் தேர்வு மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்க: கடந்த 5 ஆண்டுகளில் 29.7 லட்சம் பொறியியல் இடங்கள் நிரப்பப்படவில்லை - மத்திய அரசு
மேலும் விவரங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இரண்டாம் தளத்தில் உள்ள மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Banking jobs