முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / சென்னையில் இலவச மேக்-அப் பயிற்சி... 100% வேலைவாய்ப்பு உறுதி... உடனே விண்ணப்பியுங்கள்

சென்னையில் இலவச மேக்-அப் பயிற்சி... 100% வேலைவாய்ப்பு உறுதி... உடனே விண்ணப்பியுங்கள்

காட்சிப் படம்

காட்சிப் படம்

இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair & Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புகழ்பெற்ற அழகு நிலையங்களில் பணிபுரியவும் மற்றும் சுய தொழில் தொடங்குவதற்கும் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர்/ ஆதிதிராவிட அருந்ததியர்/ பழங்குடியின இளைஞர்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு திறன் பயிற்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னை மகா அழகு கலை பயிற்சி நிலையத்தின் (Maha Family salon and spa International Training Academy) மூலமாக அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் (Cosmetology& Hair Dressing) பயிற்சியை தாட்கோ கழகம் அறிவித்துள்ளது.

இப்பயிற்சியில் ஆதிதிராவிடர் / பழங்குடியின சார்ந்த பத்தாம் வகுப்பு படித்த 18 முதல் 30 வயது வரை உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 45 நாட்கள் ஆகும். மேலும் சென்னையில் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தில் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியை முழுமையாக முடிக்கும் மாணவர்களுக்கு இந்திய தேசிய திறன் மேம்பாடு NSDI (National Skill Development Of India)-யால் அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும் என்று தாட்கோ நிறுவனம் தெரிவித்துளளது.

Cosmetology & Hair Dressing Training Programme
தாட்கோ திறன் பயிற்சித் திட்டம்

மேலும், இப்பயிற்சியினை பெற்றவர்கள் தனியார் அழகு நிலையங்களில் (Gayathri Hair & Skin Salon, RKS Beauty Parlour, Naturals and body craft) பணிபுரிய 100% வேலைவாய்ப்பு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இப்பயிற்சியில் வெற்றிகரமாக முடிக்கும் மாணவர்களுக்கு ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.15,000/-முதல் ரூ.20,000/- வரைபெறலாம். இப்பயிற்சிக்கான மொத்த செலவுத் தொகையான ரூ.45,000-த்தை தாட்கோ நிறுவனமே ஏற்கும்.

இதையும் வாசிக்க: தனியார் வங்கி மற்றும் காப்பீட்டுத் துறைகளில் பணிபுரிய ஏதுவாக கணக்கு நிர்வாக (Account Executive) பணிக்கான இலவச பயிற்சியை தாட்கோ நிறுவனம் அறிவித்துள்ளது

மேலும், சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் அழகு சாதனவியல் மற்றும் சிகை அலங்காரம் தொழில் செய்ய தாட்கோ மூலமாக ரூ.2.25 இலட்சம் மானியத்துடன் கூடிய ரூ.10 இலட்சம் கடன் உதவி வழங்கப்படும். இப்பயிற்சியினை பெற தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

First published:

Tags: Employment