Home /News /employment /

கறவை மாடுகள் வாங்க சிறப்பு மானியம்: தாட்கோ அறிவிப்பு

கறவை மாடுகள் வாங்க சிறப்பு மானியம்: தாட்கோ அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு மானியம் வழங்கப்படும் - தாட்கோ

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்படும் என்று தாட்கோ தெரிவித்துள்ளது.

    முன்னதாக, 2022-23 ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின் போது,"    பெருமளவில் விவசாயத் தொழில் புரியும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை பொருளாதாரத்தில் தற்சர்பு உடையவர்களாக மாற்றிடும் வகையில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 500 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு ரூ.7.50 கோடி மதிப்பீட்டில் கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.2.25 கோடி மானியம் வழங்கப்படும்" என்று ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி அறிவித்தார்.

    மேற்காணும், அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ்  கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள 450 ஆதிதிராவிடர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்க தாட்கோ பொருளாதார மேம்பாட்டுத் நிட்டத்தின் ரூபாய் இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம்  மானியமாக மத்திய அரசு நிதியிலிருந்து  செலவிட (SCA SCP) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளதாக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளது.

    இதையும்  வாசிக்க:  தமிழக அரசின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய சலுகை

    அதேபோன்று, 50 பழங்குடியினர் மக்களுக்கு கறவை மாடுகள் வாங்கி பயனடைய ரூ.22.50,000) மாநில அரசு நிதியிலிருந்தும் பெற்று வழங்க நிதி ஒப்பளிப்பு வழங்கியு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Employment

    அடுத்த செய்தி