Home /News /employment /

ஊழியர்களுக்கு ஸ்விக்கியின் சூப்பர் அறிவிப்பு ! வேறு எந்த நிறுவனத்துக்கும் இந்த மனசு வராது

ஊழியர்களுக்கு ஸ்விக்கியின் சூப்பர் அறிவிப்பு ! வேறு எந்த நிறுவனத்துக்கும் இந்த மனசு வராது

ஸ்விக்கி பணியாளர்.

ஸ்விக்கி பணியாளர்.

தங்களுடைய ஆசைகளைப் பின்பற்றுவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதாலும் ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் உயரவேண்டும் என்பதாலும் இத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India
    ஸ்விக்கி நிறுவன ஊழியர்கள் தங்கள் வேலைநேரம் முடிந்தவுடன் வேறு நிறுவனப் பணிகளில் ஈடுபடலாம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கு ‘மூன்லைட் பாலிசி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

    இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ஸ்விக்கி நிறுவனம் இந்த மூன்லைட் பாலிசியை பின்பற்றும் ஊழியர்கள் ஸ்விகி நிறுவன வேலைகள் பாதிக்காத வண்ணம் வேறு பணிகளில் ஈடுபடலாம் என அறிவுறுத்தியுள்ளது. எப்போதும் ஸ்விக்கி நிறுவனப் பணிகளே முதன்மையாக இருக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

    “உற்பத்தித்திறன் பாதிக்காத வகையிலும் ஸ்விகி நிறுவனத்தின் கொள்கைகளுக்கு உட்பட்டும் அலுவலக நேரம் முடிந்தவுடனே அல்லது வார இறுதி நாட்களிலோ இந்த இரண்டாம் வேலைகளை ஊழியர்கள் செய்துகொள்ளலாம்.” என ஸ்விக்கி தெரிவித்துள்ளது.

    இந்த திட்டம் ஸ்விக்கி ஆப்பை நடத்தும் பண்ட்ல் டெக்னாலஜீஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும் பொருந்தும். உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி பார்ட்னர்ஸ் என அழைக்கப்படும் பணியாளர்கள் இந்த திட்டத்திற்குக் கீழ் வரமாட்டார்கள்.

    ஒரு வேளை அந்த இரண்டாம் வேலை அலுவலக பணிகளைப் பாதிப்பதாக நிறுவனத் தரப்பில் கருதப்பட்டால் நிறுவனத்தில் ஒப்புதல் பெற்று அந்த இரண்டாம் வேலையைத் தொடரலாம் எனவும் ஸ்விக்கி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தங்களுடைய ஆசைகளைப் பின்பற்றுவதற்கு எந்த தடையும் இருக்கக்கூடாது என்பதால் இத்தகைய திட்டத்தை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும் பணியாளர்களின் நலனை முதன்மையாகக் கருதி இயங்கும் நிறுவனம் தங்களுடையது எனவும் ஸ்விக்கி நிறுவனத்தின் ஹெச்ஆர் பிரிவு தலைவர் கிரிஷ் மேனன் தெரிவித்துள்ளார்.

    சில நாட்களுக்கு முன்பு தன் பணியாளர்கள் பணிக்காலம் முழுக்க வீட்டிலிருந்தே பணிபுரியும் திட்டத்தையும் ஸ்விக்கி அறிமுகப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Published by:Saravana Siddharth
    First published:

    Tags: Swiggy

    அடுத்த செய்தி