ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி

மாதம் ரூ.80,000 சம்பளத்தில் உச்ச நீதிமன்றத்தில் உதவியாளர் பணி

இந்திய உச்சநீதிமன்றம்

இந்திய உச்சநீதிமன்றம்

Supreme Court of india recruitment: எழுத்துத் தேர்வு (Objective Written test), தொழிற்நுட்ப தேர்வு (Technical Aptitude Test), செய்முறை தேர்வு (Practical Aptitude Test), நேர்காணல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள்

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

உச்சநீதிமன்றத்தில் இளநிலை தொழில்நுட்ப உதவியாளர்  (Court Assistant (Junior Translator) பதவிக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பதாரர் கணினி அறிவியல்/ஐடி படிப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்து தொடர்புடைய பிரிவில் ஓராண்டு   அனுபவத்துடன் இருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல் படிப்பில்  முதுகலை அல்லது எம்எஸ்சி முதுநிலை பட்டத்துடன்  ஓராண்டு   அனுபவம் கொண்டிருக்க வேண்டும், அல்லது (கணினி அறிவியலில் பிஎஸ்சி,பிசிஏ போன்ற ஏதாவதொரு இளநிலை  கல்வித்தகுதியில் 60% மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:  ரூ.44,900-த்துடன் இதர படிகளும் சேர்த்து மொத்த ஊதியம் தோராயமாக மாதத்திற்கு ரூ.80,803 ஆக இருக்கும்.

பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

தெரிவு முறை: எழுத்துத் தேர்வு (Objective Written test), தொழிற்நுட்ப தேர்வு (Technical Aptitude Test), செய்முறை தேர்வு (Practical Aptitude Test), நேர்காணல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவார்கள். 

இதையும் வாசிக்க: 2023ல் குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியாகும்.... குரூப் IV தேர்வில் மாற்றமில்லை - டிஎன்பிஎஸ்சி!

மேற்காணும் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது பெயர், கல்வித்தகுதி, தொழிற்நுட்ப கல்வித்தகுதி, முன் அனுபவம், புகைப்படம் மற்றும் மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களுடன் கூடிய சுய விபர விண்ணப்ப படிவமாக தயார் செய்து தேவைப்படும் சான்றிதழ்களின் நகல்களுடன் தன் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,

Application for the post of Court Assistant(Technical Assistant-cum-Programmer)

Registrar (Recruitment),

Supreme Court of India, Tilak Marg,

New Delhi-110001.

விண்ணப்பபம் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 31.12.2022 ஆகும்.

Supreme Court of India Advertisement

First published:

Tags: Central Government Jobs, Supreme court