Home /News /employment /

உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பதவி: 210 காலி இடங்கள் அறிவிப்பு

உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பதவி: 210 காலி இடங்கள் அறிவிப்பு

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்திய உச்ச நீதிமன்றம்

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும்.

    இளநிலை உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    காலியிடங்கள்: 210

    பதவியிடங்களின் எண்ணிக்கை தோராயமானது, நிர்வாக காரணங்களால் அதிகரிக்கவோ, குறையவோ கூடும்.

    இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2022 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

    கல்வித்தகுதி: 

    அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளம்நிலை பட்டப் படிப்பு பெற்றிருக்க வேண்டும்;

    35 w.p.m என்ற வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்து காட்ட வேண்டும்;

    கணினி அறிவு அவசியம்.

    இதையும் வாசிக்கஅரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 

    முக்கியமான நாட்கள்: 

    அறிவிக்கை : ஜூன் 18,2022

    விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய  கடைசி நாள் : ஜுலை 10 (நள்ளிரவு 11:59 மணி வரை)

    விண்ணப்பக் கட்டணம்:  இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.500ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.250 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். இணைய வழி மூலமாக மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

    சம்பளம்:  இதர படிகளும் சேர்த்து மாதத்திற்கு ரூ.63068  தோராயமாக கிடைக்கும்.

    தெரிவு செய்யப்படும் முறை: 

    எழுத்துத் தேர்வு (Written Test), கொள்குறி வகை கணினி அறிவியல் தேர்வு, தட்டச்சுத் தேர்வு, விரிவான தேர்வு (Descriptive Test)  மற்றும் நேர்காணலில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும்.

















    எழுத்துத் தேர்வு (கொள்குறி வகை ) தருக்க பகுப்பாய்வு (Logical Analysis), எண் பகுப்பாய்வு (Numerical Analysis), பொது அறிவு ஆகியவை இதில் அடங்கும்

    கணினி திறன்
    எழுத்துத் தேர்வுக்கான நேரம் 2 மணி
    35 w.p.m என்ற வேகத்தில் கணினியில் தட்டச்சு செய்து காட்ட வேண்டும்10 நிமிடங்கள்
    விரிவான விடையளிக்கும் தேர்வுதேர்வுக்கான நேரம் 2 மணி

    www.sci.gov.in என்று இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

    SUPREME COURT OF INDIA Junior Court Assistant
    Published by:Salanraj R
    First published:

    Tags: Supreme court

    அடுத்த செய்தி