Home /News /employment /

உச்சநீதிமன்றத்தில் வேலை.. நல்ல சம்பளம் - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

உச்சநீதிமன்றத்தில் வேலை.. நல்ல சம்பளம் - டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

Supreme Court of India vacancy | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    இந்திய உச்ச நீதிமன்றத்தில் காலியாக உள்ள 210 காலியிடங்களை நிரப்பும் பொருட்டு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் டிகிரி படித்திருந்தால் போதும். மேலும் கணினியில் போதுமான அறிவு பெற்றவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    விளம்பர எண் : விளம்பர எண் No. F.6/2022-SC (RC)படி அறிவிப்பு வெளியாகி உள்ளது. (அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவிப்பினை பெற முடியும்.

    அறிவிப்பு வெளியாகியுள்ள தேதி : ஜூன் மாதம் 18ம் தேதி இதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    மொத்த காலிப்பணியிட விவரங்கள் :  மொத்தம் இந்த வேலைக்கு 210 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    உச்ச நீதிமன்ற வேலைக்கான கல்வித் தகுதிகள் :

    • அங்கீகரிக்கப்பட்ட பல்கலை கழகத்தில் டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள்.

    • கணினியில் குறைந்தபட்சம் 35 வார்த்தைகள் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் டைப் செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

    • கணினியில் போதிய அடிப்படை அறிவு இருந்தால் போதுமானது.


    சம்பள விவரம் :  பேமேட்ரிக்ஸின் நிலை 6ன் படி ஆரம்ப அடிப்படை ஊதியம் மாதம் ரூ.35,400/-. தற்போதுள்ள விகிதத்தின்படி தோராயமான மொத்த சம்பளம் HRA உட்பட மாதம் ரூ. 63068/- வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. (pre-revised pay scale PB-2 with Grade Pay of Rs. 4200/-).

    காலியாக உள்ள பணியின் பெயர் : Junior Court Assistant பணிக்கு மொத்தம் 210 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    உச்சநீதி மன்ற வேலைக்கான வயதுத் தகுதி : 01.07.2022 தேதியின் படி விண்ணப்பிக்கும் நபர்கள் கட்டாயம் 18 வயதிற்கு குறையாமலும் 30 வயதிற்கு மிகாமழும் இருக்க வேண்டும்.

    SC/ST/OBC/Physically challenged/Ex-Servicemen and dependents of Freedom Fighters ஆகியோர் அரசு அறிவித்துள்ள வயது வரை விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்ப கட்டணத்தை எப்படி செலுத்த வேண்டும் :

    விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைன் வாயிலாக இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும் . இந்திய அரசின் உச்சநீதிமன்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கும் நபர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்திய பின்னரே விண்ணப்ப படிவம் ஏற்றுக்கொள்ளப்படும். அஞ்சல் வழியாக அனுப்பும் விண்ணப்ப கட்டணம் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

    விண்ணப்ப கட்டணம் விவரம் :

    General/OBC candidates - ரூ. 500 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    SC/ST/Ex-Servicemen/PH/Freedom Fighter candidates - ரூ. 250 விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறை :

    எழுத்துத் தேர்வு, Objective Type கணினி அறிவுத் தேர்வு மற்றும்

    தட்டச்சு (ஆங்கிலம்) தேர்வு, விளக்கத் தேர்வு (ஆங்கில மொழியில்) & நேர்காணல் ஆகியவற்றின் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    விண்ணப்பிக்க 10.07.2022ம் தேதி கடைசி தேதி. இதற்குள் விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.

    உச்சநீதி மன்ற வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

    விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் அதற்கான (https://main.sci.gov.in/ ) அதிகாரபூர்வ பக்கத்திற்குச் செல்லவும்.

    முகப்பு பக்கத்தில் உள்ள “Online Application for the post of Junior Court Assistant in the Supreme Court of India (Closing Date for online application:-10.07.2022 at 23.59 hours)” என்பதை க்ளிக் செய்து லாகின் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள படி விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் எதிர்கால பயன்பாட்டிற்காக விண்ணப்ப படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

    விண்ணப்ப படிவத்தில் நீங்கள் கொடுக்கும் மெயில் ஐடி , மொபைல் நம்பர் இரண்டும் உங்கள் தனிப்பட்ட நம்பர் மற்றும் ஐடியாக இருக்க வேண்டும் . இல்லை என்றால் உருவாக்கி அதனை கொடுக்க வேண்டும். வேலைக்கான அடுத்த கட்ட நோட்டிபிகேஷன் மின்அஞ்சல் மற்றும் குறுந்செய்தி வாயிலாகவே தெரிவிக்கப்படும்.

    அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://main.sci.gov.in/pdf/recruitment/17062022_130355.pdf

    லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.

    இந்திய உச்சநீதிமன்ற அதிகாரபூர்வ இணையதள முகவரி

    https://main.sci.gov.in/

    லிங்கில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி