SI 2022: தமிழ்நாடு காவல்துறையில் காலியாக உள்ள 444 சார்பு ஆய்வாளர்கள் எழுத்துத் தேர்வுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் இதனை பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக , கடந்த மார்ச் 8ம் தேதி காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை வெளியிட்டது. இதில், காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு 20% இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதற்கான, விண்ணப்பங்கள் ஏப்ரல் 7ம் தேதி வரை பெறப்பட்டன. தமிழ் மொழி தகுதித் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு (பொது விண்ணப்பதார்கள்) வரும் 25ம் தேதியும், துறை விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு வரும் 26ம் தேதியும் நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்த தேர்வுகளுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு தற்போது வெளியாகியுள்ளது.
அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக இந்த அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முகப்புப் பக்கத்தில்
தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு என்பதனை க்ளிக் செய்து, பதிவெண் மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்.
தேர்வுக்கான அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தேர்வின் போது கட்டாயம் அனுமதிச் சீட்டை எடுத்து வர வேண்டும். மேலும், அனுமதிச் சீட்டில் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு நிபந்தனைகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
பொது மற்றும் காவல் துறை சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கான மதிப்பெண்கள் ஒதுக்கீடு :
வ.எண் |
விவரம் |
பொது |
காவல் துறை ஒதுக்கீடு |
---|
1. |
முதன்மை எழுத்துத் தேர்வு |
70 மதிப்பெண்கள் |
85 மதிப்பெண்கள் |
2. |
உடல்திறன் தேர்வு |
15 மதிப்பெண்கள் |
விலக்கு அளிக்கப்பட்டது |
3. |
நேர்முகத்தேர்வு |
10 மதிப்பெண்கள் |
10 மதிப்பெண்கள் |
4. |
சிறப்பு மதிப்பெண்கள் |
05 மதிப்பெண்கள் |
05 மதிப்பெண்கள் |
மொத்தம் |
100 மதிப்பெண்கள் |
100 மதிப்பெண்கள் |
முதன்மை எழுத்துத் தேர்வு, உடல் திறன் போட்டி, நேர்முகத் தேர்வு மற்றும் சிறப்பு மதிப்பெண்கள் ஆகியவற்றில் பெறும் உயர்ந்தபட்ச மொத்த மதிப்பெண்களின் அடிப்படையிலும் வகுப்புவாரி இடஒதுக்கீடு மற்றும் மொத்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப தற்காலிகத் தேர்வு பட்டியல் தயார் செய்யப்படும்.
இறுதி தற்காலிகத் தேர்வின் போது ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் சமமான தகுதி மதிப்பெண்கள் பெற்றிருந்தால், பிறந்த தேதியின் அடிப்படையில் வயதில் மூத்தவருக்கு இறுதி தற்காலிகத் தேர்வின் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.