ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும் : மத்திய அரசின் வன ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு

வன உயிரியில் பன்முகத்தன்மை நிறுவனம்

வன உயிரியில் பன்முகத்தன்மை நிறுவனம்

Central Govt job alert : மத்திய அரசின் வன உயிரியில் பன்முகத்தன்மை ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் வன உயிரியில் பன்முகத்தன்மை நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் காடுகளில் வாழும் உயிரினங்கள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடத்தின் விவரங்களைப் பார்ப்போம்.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்
Store Keeper1

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு 18 இல் இருந்து 27 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு நிலை 3 அடிப்படையில் ரூ.21,700-69,100/- சம்பளமாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

விண்ணப்பதார் அங்கீகரிக்கப்பட்ட வழிக் கல்வியில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு எழுத்துத் தேர்வு அழைக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சென்னையில் உள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் 10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை..விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு https://icfre.gov.in/ என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ. 300/- Demand draft மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய : https://icfre.gov.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி :

The Director, Institute of Forest Biodiversity, Dulapally, Kompally S.O., Hyderabad – 500 100.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 10.01.2023.

மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Central Government Jobs, Jobs