முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / SBI Notification: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரோபேஷனரி ஆபீசர் பதவி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

SBI Notification: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரோபேஷனரி ஆபீசர் பதவி.. எஸ்பிஐ முக்கிய அறிவிப்பு

SBI

SBI

இந்த ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிக்கு ஏற்கனவே 4 முறை முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu |

இளைஞர்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிகளுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பை பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ)  வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்:

ஆன்லைன் பதிவு செய்தல்: 22.09.2022 முதல் 12.10.2022 வரை; அன்றிரவே விண்ணப்பிக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்;

முன்-தேர்வு பயிற்சி : நவம்பர்/டிசம்பர் 2022

ஆன்லைன் தேர்வுக்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்தல்:  டிசம்பர் முதல் மற்றும் இரண்டாவது வாரத்தில் இருந்து

கணினி வழியில் நடைபெறும் முதல்நிலை எழுத்துத் தேர்வு: டிசம்பர் 17,18,19,20 ஆகிய நாட்கள்

கணினி வழியில் நடைபெறும் முதன்மை எழுத்துத் தேர்வு : 2023 ஜனவரி/பிப்ரவரி

திறனறிவுத் தேர்வு: 2023 பிப்ரவரி/மார்ச்

நேர்முகத் தேர்வு : 2023 பிப்ரவரி/மார்ச்

இறுதி  பட்டியல்: 2023 மார்ச்

காலியிடங்கள்:  1,673

இதில் 648 இடங்கள் பொதுப் பிரிவினருக்கும், 464 இடங்கள் ஓபிசி பிரிவினருக்கும், 160 இடங்கள்  பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கும், 270 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 131 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.750ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம்  செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஏதேனும் இளம்நிலை பட்டம் பெற்றவர்கள் (அல்லது) மத்திய அரசு அங்கீகரித்த அதற்கு சமமான கல்வியில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகிறீர்களா? இந்த தலைப்பை எல்லாம் மிஸ் பண்ணாம படிங்க

வாய்ப்பு:  இந்த ப்ரோபேஷனரி ஆபீசர் பதவிக்கு ஏற்கனவே 4 முறை முதன்மைத் தேர்வு எழுதிய விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், பொதுப் பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், ஓபிசி வகுப்பினர், ஓபிசி வகுப்பினரில் உள்ள மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு முயற்சிகளுக்கான அதிகபட்ச வாய்ப்பு 7ஆக உள்ளது. 18.04.2010 அன்று  நடைபெற்ற தேர்வில் இருந்து இந்த எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்படுவதாகவும், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் அதிகபட்ச வயதுவரம்புக்கு உட்பட்டு தேர்வுக்கு முயற்சிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.04.2022 அன்று 21-க்கு மேலும், 30-க்கு கீழும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதரபிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

ஆரம்ப கால மாத சம்பளமாக ரூ.s 41,960/ வரை பெறலாம்.

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS

First published:

Tags: Bank Exam, Bank Recruitment, SBI