Home /News /employment /

எஸ்எஸ்சி சுருக்கெழுத்தாளர் தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

எஸ்எஸ்சி சுருக்கெழுத்தாளர் தேர்வு: விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

எஸ்எஸ்சி

எஸ்எஸ்சி

கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெற வேண்டும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |
    நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவரா நீங்கள்!!!!  மத்திய அரசின் அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வில் (Stenographer Grade "C‟ & D‟ Examination, 2022) கலந்து கொள்ளுங்கள்.  இதற்கான, விண்ணப்ப செயல்முறை  நாளையுடன் முடிவடைவதால், கால நேரம் தாழ்த்தாமல்  இன்றே விண்ணப்பியுங்கள்.

    விண்ணப்பம் செய்வது எப்படி?

    https://ssc.nic.in என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    யார் விண்ணப்பிக்கலாம்? 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ படிப்பு முடித்திருக்க வேண்டும்.

    வயது வரம்பு என்ன: "சி" நிலை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். "டி" நிலை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும்.

    இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

    ஓபிசி பிரிவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டும், எஸ்சி/எஸ்டி பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டும் சலுகை வழங்கப்படும்.

    தெரிவு செய்யப்படும் முறை: கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெற வேண்டும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

    இதையும் வாசிக்க: மாதம் ரூ.1,38,500 சம்பளத்தில் டிஎன்பிஎஸ்சி வனத்தொழில் பழகுநர் பணி: இன்றே விண்ணப்பியுங்கள்

    திறன் தேர்வு: "C" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும், "D" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

    தட்டச்சு திறன் தேர்வு வெறும் தகுதித் தேர்வாக மட்டும் இருக்கும், கணினி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

    மேலும், விவரங்களுக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்
    Published by:Salanraj R
    First published:

    Tags: SSC

    அடுத்த செய்தி