ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசுத் துறைகளில் 4,500 காலியிடங்கள் : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

மத்திய அரசுத் துறைகளில் 4,500 காலியிடங்கள் : விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்!

காட்சிப் படம்

காட்சிப் படம்

SSC Higher Secondary (10+2) level Examination: விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்களில் காலியாக உள்ள போட்டித்தேர்விற்கான (Combined Higher Secondary (10+2) Level Examination) நாளையுடன் (04-01-2023) முடியவடிகிறது. விருப்பமுள்ள  தேர்வர்கள், கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல்  போதிய கால அவகாசம் இருக்கும்போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்: தோராய எண்ணிக்கை 4,500

பதவி: இந்த ஆட்சேர்க்கையின் மூலம் இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant), தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’) பதவிகள் நியமனம் செய்யப்பட உள்ளன.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/-

பட்டியல் இனத்தவர்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்  விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

SSC CHSL 2022 கல்வித் தகுதி: மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து இணையான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC CHSL 2022 வயதுக்கான தகுதி: 01-01-2022 அன்று விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

இதையும் வாசிக்கமத்திய அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்குக: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

விண்ணப்பம் செய்வது எப்படி? ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். Combined Higher Secondary (10+2) Level Examination, 2022 அறிவிக்கையை இந்த இணைப்பின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

First published:

Tags: Central Government Jobs