மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராஃபராக வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராஃபர் பணியிடங்கள் ஸ்டாஃப் செலக்ஷன் கமிஷன் மூலம் நிரப்பப்பட உள்ளன.

மத்திய அரசு துறைகளில் ஸ்டெனோகிராஃபராக வேண்டுமா? இதோ ஒரு வாய்ப்பு!
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: November 11, 2018, 6:31 PM IST
  • Share this:
மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஸ்டெனோகிராஃபர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வை ஸ்டாஃப் செலக்‌ஷன் கமிஷன் (SSC) நடத்த உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கடைசி தேதி நவம்பர் 19.

வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 1-1-2019 நிலவரப்படி 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கிரேடு-சி பணிக்கு 30 வயதுக்கு உட்பட்டர்கள் விண்ணப்பிக்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12-ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கிரேடி-டி பணிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகளும், கிரேடு-சி பணிக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகளும் சுருக்கெழுத்தில் குறிப்பெடுத்து அதைக் குறித்த நேரத்தில் தட்டச்சு செய்யும் திறன் படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் எவ்வளவு பணியிடங்கள் என்ற விவரம் பின்னர் வெளியாகும்.


விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் ரூ. 100-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்.சி, எஸ்.டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் மட்டுமே அனுப்ப வேண்டும். இதற்கான கடைசி தேதி நவம்பர் 19.

எழுத்துத் தேர்வுக்கான பாடங்கள், தேர்வு மையங்கள் உள்ளிட்ட பிற விவரங்களை தெரிந்துகொள்ள www.ssc.gov.in மற்றும் https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_steno2018_22102018.pdf ஆகிய வலைதளங்களைப் பார்க்கவும்.

Also watch
First published: November 11, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading