மத்திய அரசின் சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைகளுக்கு பணியாளர்களை அமர்த்துவதற்கான கணினிவழித் தேர்வு வரும் 17,18 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் மறக்காமல் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
முன்னதாக, சுருக்கெழுத்தாளர் ‘சி’ மற்றும் ‘டி’ நிலைகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை (Stenographer Grade ‘C’ & ‘D’ Examination, 2022) மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி வெளியிட்டது. இதற்கான, விண்ணப்பங்கள் செப்டம்பர் மாதம் 5ம் தேதி வரை பெறப்பட்டன.
இதையும் வாசிக்க: ஐடிஐ படித்தவர்களுக்கு தொழில் பழகுநர் பயிற்சி... மாதம் ரூ.8000 உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?
தேர்வு தேதி மற்றும் நேரம்: தென் மண்டலத்தில் இத்தேர்வு 17.11.2022, 18.11.2022 ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை, பிற்பகல் 1.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை என 3 ஷிப்டுகளாக தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மண்டலத்தில் 35557 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திரப்பிரதேசத்தில் குண்டூர், கர்னூல், ராஜமுந்திரி, திருப்பதி, விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் ஐதராபாத், வாரங்கல் ஆகிய இடங்களிலும் என 13 மையங்கள் / நகரங்களில் 17 இடங்களில் நடைபெற உள்ளது.
இதையும் வாசிக்க: மத்திய அரசின் யுரேனியம் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெடில் பயிற்சியுடன் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
அனுமதிச் சீட்டு: தேர்வு நடைபெறும் தேதிக்கு 4 நாட்களுக்கு முன்பிருந்து அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, 17ம் தேதி அன்று தேர்வெழுதும் மாணவர்கள் 13ம் தேதியில் இருந்தும், 18 அன்று தேர்வெழுதும் மாணவர்கள் 14ம் தேதியில் இருந்தும் அனுமதிச்ச சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அனுமதிச் சீட்டு பதிவிறக்கம் செய்வது தொடர்பான விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகவரிக்கும் அனுப்பப்படும்.
ssc.nic.in என்ற ஆணையத்தின் இணையதளம் வாயிலாக மட்டுமே அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
பொது நிபந்தனைகள்:
கைக்கடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், புளுடூத், ஹெட்போன், பேனா/ பட்டன் ஹோல்/ ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர் ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதுபோன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், அவர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன், சட்ட/ குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும் சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்த 3 -7 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும். எனவே, தடை செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பைகள் எதையும் தேர்வு மையத்திற்கு எடுத்து வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதையும் வாசிக்க: தொழில் முனைவோருக்கு 5 நாள் சிறப்பு பயிற்சி: இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..!
மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணமின்றி, விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும். மேலும் விவரங்கள்/ சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட்லைன்- 044 2851139 & செல்போன்: 94451 95946) வாயிலாக தொடர்புகொள்ளலாம் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs, SSC