ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

900 அறிவியல் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

900 அறிவியல் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு

காட்சிப் படம்

காட்சிப் படம்

இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  இந்திய வானிலைத் துறையில் அமைச்சகம் சாரா, அரசிதழ் பதிவுறா குரூப் 'பி'  பதவிகளுக்கான (Group ‘B’ Non-Gazetted, Non-Ministerial post) ஆள் சேர்க்கை அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முக்கியமான நாட்கள்:  

  ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள்:   30-09-2022

  இணைய வழியில் விண்ணப்பபங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 18-10-2022; (அன்றிரவுக்குள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்)

  கணினி வழியில் எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: டிசம்பர் மாதம் ஆகும்.

  கல்வித் தகுதி:  குறைந்தபட்சம் இயற்பியலை ஒரு பாடமாக கொண்டு, அறிவியல், கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம்  ஆகிய ஏதேனும் ஒரு பாடத்தில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

  (அல்லது)

  எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பட்டத்தில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: காவலர் தேர்வு : யூடியூப் மூலம் சிறப்பு பயிற்சி வகுப்புகள் அறிவிப்பு

  வயது வரம்பு:  18-10-2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 35 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

  விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  இதையும் வாசிக்க சென்னை நியூ கல்லூரியில் மாபெரும் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்: 5000 காலியடங்கள் நிரப்பு முடிவு

  விண்ணப்பம் செய்வது எப்படி? இத்தேர்வுக்கு sscnic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

  தெரிவு செய்யப்படும் முறை:  கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வில் பெரும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல்  தயாரிக்கப்படும்.

   

  தமிழ்நாட்டில் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மையங்களில் தேர்வு நடைபெறும்.

  Published by:Salanraj R
  First published:

  Tags: Recruitment, SSC