SSC TENTATIVE CALENDAR OF EXAMINATIONS: 2023 -24 ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது. இந்த அட்டவணையில், 17 பதவிகளுக்கான போட்டித் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், வரும் ஆண்டில் டெல்லி காவல் துறைக்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு பதில் டெல்லி காவல்துறை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022 (Multi Tasking non technical staff): 2022 ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு அறிவிப்பு வரும் ஜனவரி மாதம் 17ம் தேதி வெளியிடப்படும். பிப்ரவரி 24ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஏப்ரல் மாதத்தில் நிலை - I தேர்வு நடைபெறும்.
2023 Multi Tasking non technical staff : 2023 ஆண்டுக்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் தேர்வு அறிவிப்பு வரும் ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிடப்படும். ஜுலை 14ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். 2023 ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் நிலை - I தேர்வு நடைபெறும்.
COMBINED GRADUATE LEVEL EXAMINATION, 2023 : ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான தேர்வு, 2023 (நிலை -1) அறிவிப்பு வரும் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக மே 1ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். நிலை - I தேர்வு ஜூன்/ஜுலை மாதங்களில் நடைபெறும்.
Combined Higher Secondary (10+2) Level Examination (Tier-I) 2023: ஒருங்கிணைந்த மேல்நிலை (10 + 2) அளவிலான தேர்வு (முதல்நிலை) 2023 அறிவிப்பு வரும் மே மாதம் 9ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஜூன் 8ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜுலை/ஆகஸ்ட் மாதங்களில் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெறும்.
2023 Sub-Inspector in Delhi Police and Central
Armed Police Forces Examination, 2023): தில்லி காவல்துறை மற்றும் மத்திய ஆயுத காவல்படையில் உதவி ஆய்வாளர் தேர்வு 2023 வரும் ஜுலை மாதம் 20ம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 13ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். அக்டோபர் மாதம் நிலை- I எழுத்துத் தேர்வு நடைபெறும்.
Stenographer Grade ‘C’ &‘D’ Examination, 2023 (Tier-1) : 2023 சுருக்கெழுத்தாளர் சி & டி நிலைத் தேர்வு பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் 2ம் தேதி வெளியிடப்படும். ஆகஸ்ட் 23ம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படும். அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நிலை-I எழுத்துத் தேர்வு நடைபெறும்.
Junior Hindi Translator, Junior Translator and Senior Hindi Translator Examination, 2023: இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி வெளியிடப்படும். செப்டம்பர் 12ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அக்டோபர்/நவம்பர் மாதங்களில் நிலை-I எழுத்துத் தேர்வு நடைபெறும்.
இதையும் வாசிக்க: அரசு மருத்துவமனையில் டிப்ளமோ/டிகிரி படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு : விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்களே உள்ளன.
Junior Engineer (Civil, Mechanical, Electrical and Quantity Surveying & Contracts) Examination, 2023: இளநிலை பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலக்ட்ரிகல், க்வான்டிட்டி சர்வேயிங், ஒப்பந்தங்கள்) பணிக்கான அறிவிப்பு வரும் ஜுலை மாதம் 26ம் தேதி வெளியிடப்படும். இணையதளம் வாயிலாக ஆகஸ்ட் 16ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அக்டோபர் மாதம் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
இதைத் தவிர, பல்வேறு துறை சார்ந்த எழுத்துத் தேர்வுகள் இந்த அட்டவணையில் இடம்பெற்றுள்ளன. முழுமையான விவரங்களை ssc.nic.in -ல் காணலாம்.
இதையும் வாசிக்க: ஐடிஐ முதல் முதுகலை வரை : மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு
மேலும், ஆண் மற்றும் பெண் காவலர்களுக்கான (நிர்வாகம்) டெல்லி காவல் தேர்வு, டெல்லி காவல்துறையில் உள்ள பன்னோக்கு காவலர் பணியிடங்களுக்கான தேர்வை டெல்லி காவல் துறையே மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, இந்த தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Central Government Jobs