2022 ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளதாகவும், 42,000 பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 'அக்னிபத்' திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ், ராணுவப் படையில் நான்கு ஆண்டுகளுக்கு மட்டும் ஆளெடுக்கப்படும். நான்கு ஆண்டுகள் நிறைவு செய்த அக்னிவீரர்கள் மீண்டும் சமூகத்துக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள். இருப்பினும், ராணுவத்தின் தேவைக்கேற்ப, ஆர்வமுள்ள அக்னிவீரர்கள் படையில் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்படும். மையப்படுத்தப்பட்ட ஆட்சேர்ப்பு செயல்முறையின் அதிகபட்சமாக 25 சதவீதம் பேர் நிரந்தர ராணுவப் பணிக்கு சேர்த்துக் கொள்ளப்படுவர். இத்திட்டம், தங்கள் கனவுகளை சிதைப்பதாகக் கூறி இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதையடுத்து பல்வேறு துறைகளும் அக்னிபத் வீரர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்தியப் பணியாளர் தேர்வாணையம் ட்விட்டர் தளத்தில் சில அறிவிப்பை வெளியிட்டது. அதில்,"இந்திய அரசில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் அளிக்கப்பட உள்ளன. 2022 ஆண்டு இறுதிக்குள் 15,247 பதவிகளுக்கான பணி நியமன முடிவுகள் இறுதி செய்யப்பட உள்ளது. 42,000 பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். 67,768 காலி இடங்களை நிரப்புவதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டு உள்ளது" என்று தெரிவித்து.
முன்னதாக, அனைத்து துறைகள் மற்றும் அமைச்சகங்களின் மனித வள நிலவரம் குறித்து பிரதமர் மோடி கடந்த ஜூன் 14ம் தேதி ஆய்வு செய்தார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளில், மத்திய அரசுத் துறைகளில் 10 லட்சம் காலி இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
இதையும் வாசிக்க:
உச்ச நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளர் பதவி: 210 காலி இடங்கள் அறிவிப்பு
01.03.2020 நிலவரப்படி, உள்துறை அமைச்சகம், ரயில்வே துறை, அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பல லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படமால் உள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SSC