மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் பணி நியமனத்திற்கான பன்னோக்கு (தொழில்நுட்பம் சாராத) பணியாளர் மற்றும் ஹவல்தார் நிலை I தேர்வு ஜுலை 5ம் தேதி முதல் தொடங்குகிறது.
தென்பிராந்தியத்தில் 2,34,969 விண்ணப்பதாரர்கள் இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். கணினி வழியில் தேர்வு நடைபெறும்.
தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மற்றும், ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 20 நகரங்களில் அமைந்துள்ள 23 மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது.
தென்பிராந்தியத்தில் 5.7.2022 முதல் 8.7.2022 வரையிலும், 11.7.2022 முதல் 15.7.2022 வரையிலும், 18.7.2022 முதல் 22.7.2022 வரையிலும் 14 நாட்கள் இத்தேர்வு நடைபெறும். தினந்தோறும் 3 ஷிப்டுகளாக, முதல் ஷிப்ட்- காலை 9.00 மணிமுதல், 10.30 மணி வரையிலும், 2-வது ஷிப்ட்- பிற்பகல் 1.00 மணி முதல் 2.30 மணி வரையிலும், 3-வது ஷிப்ட் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரையிலும் தேர்வு நடைபெறும்.
இதையும் வாசிக்க: UGC-NET தேர்வு தேதிகள் அறிவிப்பு
விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட மின்னணு அனுமதி சான்றிதழை தேர்வாணையத்தின் இணையதளத்தில் இருந்து, தேர்வு தொடங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பாக இருந்து, தேர்வு முடிவடையும் நாள் வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என சென்னையில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் வாசிக்க: அடுத்த 6 மாதத்துக்குள் 42,000 பேருக்கு பணி - வேலைவாய்ப்பு குறித்து எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் / துறைகள் / அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் பணியிடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் சுங்கம் (சிபிஐசி), மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (சிபிஎன்) ஆகியவற்றுக்கு ஹவல்தார் பதவிகளுக்கும் ஆள்சேர்ப்புக்காக இந்த போட்டித் தேர்வுகள் (Multi Tasking (Non- Technical) Staff and Havaldar (CBIC & CBN) Examination- 2021) நடைபெற இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.