Home /News /employment /

தமிழகத்தில் எஸ்எஸ்சி ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர் தேர்வு எப்போது?

தமிழகத்தில் எஸ்எஸ்சி ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர் தேர்வு எப்போது?

எஸ்எஸ்சி தேர்வு

எஸ்எஸ்சி தேர்வு

தென் மண்டலத்தில் இத்தேர்வு 1.10.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்டாக நடைபெற உள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    மத்திய பணியாளர் தேர்வாணையத்தின், ஜூனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், ஜூனியர் மொழிப்பெயர்ப்பாளர், சீனியர் இந்தி மொழிப்பெயர்ப்பாளர், 2022 (தாள்-1) தேர்வு தென் மண்டலத்தில் அக்டோபர் 1 அன்று நடைபெறுகிறது.

    தென் மண்டலத்தில் 351 விண்ணப்பதாரர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், ஆந்திர பிரதேசத்தில் கர்னூல், விஜயவாடா, விசாகப்பட்டினத்திலும், தெலங்கானாவில் ஹைதராபாத் ஆகிய ஏழு நகரங்களில் ஏழு மையங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : தென் மண்டலத்தில் இத்தேர்வு 1.10.2022 அன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை ஒரு ஷிப்டாக நடைபெற உள்ளது.  

    அனுமதிச் சீட்டுதேர்வு நடைபெறும் தேதிக்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக இருந்து தேர்வாணைய வலைதளத்தில்  மின்னணு – தேர்வு அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த விவரங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது செல்போன் எண்ணிற்கு எஸ்எம்எஸ் வாயிலாகவும், ஆன் லைன் விண்ணப்பத்தில் தெரிவித்த மின்னஞ்சல் முகரிக்கு மின்னஞ்சல் வாயிலாகவும் அனுப்பப்படும்.

    நிபந்தனைகள்:  கைகடிகாரங்கள், புத்தகங்கள், துண்டு காகிதங்கள், பத்திரிகைகள், மின்னணு சாதனங்களை (செல்போன், புளுடூத், ஹெட்போன், பேனா/ பட்டன் ஹோல்/ ஸ்பை கேமராக்கள், ஸ்கேனர், கால்குலேட்டர் ஸ்டோரேஜ் சாதனங்கள் உள்ளிட்டவை) தேர்வு அறைக்குள் கொண்டு வர கண்டிப்பாக அனுமதி கிடையாது. அதுபோன்ற பொருட்கள் எதையும் தேர்வு அறைக்குள் விண்ணப்பதாரர்கள் வைத்திருப்பதை கண்டறியப்பட்டால், தேர்வர்களின் விண்ணப்பங்கள் ரத்து செய்ய நேரிடுவதுடன், சட்ட/ குற்றவியல் ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும்,  சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் அடுத்த 3 -7 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டு மற்றும் அசல் அடையாள ஆவணமின்றி, விண்ணப்பதாரர்கள் யாரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே அனைத்து விண்ணப்பதாரர்களும் தங்களது மின்னணு தேர்வு கூட அனுமதி சீட்டை தவறாமல் பதிவிறக்கம் செய்திருக்க வேண்டும்.

    இதையும் வாசிக்க: பி.எட் பட்டப் படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

    மேலும் விவரங்கள்/ சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் தென் மண்டல அலுவலகத்தின் உதவி எண்கள் (லேண்ட்லைன்- 044 2851139 & செல்போன்: 94451 95946) உதவி எண்கள் வாயிலாக தொடர்புகொள்ளலாம்.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Examination, SSC

    அடுத்த செய்தி