Home /News /employment /

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - முக்கிய அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு - முக்கிய அறிவிப்பு

சுருக்கெழுத்தாளர் நிலை

சுருக்கெழுத்தாளர் நிலை

https://ssc.nic.in என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
    மத்திய அரசின் பல்வேறு துறைகளில்  காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வுக்கான (Stenographer Grade "C‟ & D‟ Examination, 2022) ஆள்சேர்ப்பு அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) வெளியிட்டுள்ளது.

    முக்கியமான நாட்கள்:

    அறிவிக்கை: 20.08.2022

    இணைய விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் : 05.09.2022

    தேர்வு நடைபெறும் நாள்: செப்டம்பர் மாதம் 

    காலியிடங்கள்: விரைவில் அறிவிக்கப்படும்.

    கல்வித் தகுதி:

    12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    பல்கலைக்கழகங்களால் அங்கீகரிக்கப்பட்ட  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

     வயது வரம்பு:  "சி"  நிலை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.01.2021 அன்று 30-க்கு கீழ் இருக்க வேண்டும். "டி" நிலை பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  வயது 01.01.2021 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும்.

    இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

    ஓபிசி பிரிவில் உள்ள  மாற்றுத்திறனாளிகளுக்கு 13 ஆண்டும், எஸ்சி/எஸ்டி பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டும் சலுகை வழங்கப்படும்.

    தெரிவு செய்யப்படும் முறை:

    கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வு நடைபெற வேண்டும். இதில், தேர்ச்சி பெற்றவர்கள் திறன் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.



    திறன் தேர்வு:  "C" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும், "D" நிலை பதவிக்கு நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் கொண்டவராக இருக்க வேண்டும்.

    தட்டச்சு திறன் தேர்வு வெறும் தகுதித் தேர்வாக மட்டும் இருக்கும், கணினி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

    இதையும் வாசிக்க: NLC நிறுவனத்தில் 226 காலி பணியிடங்கள்.. கல்வித்தகுதி, வயதுவரம்பு - முழு விவரம்

    விண்ணப்பம் செய்வது எப்படி? 

    https://ssc.nic.in என்ற இணைய பக்கத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

    பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

    Stenographer Grade "C‟ & D‟ Exmination, 2022
    Published by:Salanraj R
    First published:

    Tags: Employment, Job, SSC

    அடுத்த செய்தி