Home /News /employment /

மத்திய அரசு துறைகளில் இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு

மத்திய அரசு துறைகளில் இளநிலை பொறியாளர் பணி: எஸ்எஸ்சி முக்கிய அறிவிப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

இளநிலை பொறியாளர் சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2022 ஆட்சேர்ப்பு அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
    இந்தியாவின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கும் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்: 02.09.2022 (நள்ளிரவு 11 மணி வரை)

    காலியிடங்கள்: வரும் தேதிகளில் அறிவிக்கப்படும். அவ்வப்போது, பணியாளர் தேர்வாணையத்தின் இணைய பக்கத்தை பார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

    அமைச்சகங்கள் மற்றும் துறைகள்: 







    துறைகள்பணிகள்
























































































    Central Water CommissionJunior Engineer (Civil)
    Central Water CommissionJunior Engineer (Mechanical)
    CPWDJunior Engineer (Civil)
    CPWDJunior Engineer (Mechanical)
    Military Engineering Service( MES)Junior Engineer (Civil)
    Military Engineering Service( MES)Junior Engineer (Electrical & Mechanical)
    Military Engineering Service( MES)Junior Engineer (Quantity Surveying and Contract)
    Farrakka Barrage (Project)Junior Engineer (Civil)
    Farrakka Barrage (Project)Junior Engineer (Electrical)
    Farrakka Barrage (Project)Junior Engineer (Mechanical)
     Border Roads OrganizationJunior Engineer (Civil)
     Border Roads OrganizationJunior Engineer (Electrical)
     Border Roads OrganizationJunior Engineer (Mechanical)
    Central Water Power Research StationJunior Engineer (Civil)
    Central Water Power Research StationJunior Engineer (Electrical / Mechanical)
    Dte. of Quality Assurance (Naval)Junior Engineer (Naval Quantity Assurance -(Mechanical)
    Dte. of Quality Assurance (Naval)Junior Engineer (Naval Quantity Assurance -(Electrical)
    National Technical Research OrganizationJunior Engineer (Civil)
    National Technical Research OrganizationJunior Engineer (Electrical)
    National Technical Research OrganizationJunior Engineer (Mechanical)
    Ministry of PortsJunior Engineer (Civil/ Mechanical/Electrical)

    கல்வித் தகுதி:

    எல்லை சாலைகள் அமைப்பு (BRO), மத்திய நீர்வள ஆணையம் (CwC), ராணுவ பொறியியல் சேவை(MES) ஆகிய துறைகளில் உள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தொடர்புடைய பொறியியக் துறைகளில் பட்டதாரி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  இதர பணிகளுக்கு தொடர்புடைய துறைகளில் டிப்ளமோ படிப்பு போதுமானதாகும்.

    வயது வரம்பு: 

    மத்திய பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை ஆகிய பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்புவோர்,  01.01.2022 அன்று 32க்கு கீழ் இருக்க வேண்டும். இதர பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.01.2022 அன்று 30க்கு கீழ் இருக்க வேண்டும்.

    இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

    ஊதிய விகிதம்: ரூ. 35400 முதல் ரூ.1,12,400 வரை (சம்பள ஏற்ற நிலை - 6)

    இதையும் வாசிக்க:  மத்திய ஆயுத காவல்படைகளில் 4300 காலியிடங்கள்.. விண்ணப்பம் செய்வது எப்படி?

    தெரிவு முறை: எழுத்துத் தேர்வில்( தாள் I மற்றும் தாள் II ) பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும். எல்லை சாலைகள் அமைப்பு பிரிவில் உள்ள பதவிகளுக்கு மட்டும்  எழுத்துத் தேர்வுடன் உடற்தகுதி தேர்வு, உடல்திறன் போட்டிகள், ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு முறை நடைபெறுகிறது

    தேர்வின் தன்மை:



    விண்ணப்பம் செய்வது எப்படி?

    விண்ணப்பங்கள் அனைத்தும் தேர்வாணையத்தின் வளைதளமான ssc.nic.in வாயிலாக ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன் விண்ணப்பபடிவத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படும் மற்றும் கையெழுத்தை பதிவேற்றம் செய்யவேண்டும். புகைப்படங்கள், தொப்பி மற்றும் மூக்கு கண்ணாடி இல்லாமல் இருக்கவேண்டும்.

    அறிவிக்கை: இளநிலை பொறியாளர் சிவில், இயந்திரவியல், மின்சாரவியல் மற்றும் அளவு மதிப்பீடு & ஒப்பந்தங்கள் தேர்வு, 2022 (JUNIOR ENGINEER (CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS) EXAMINATION, 2022)
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, SSC

    அடுத்த செய்தி