மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம் மற்றும் துறைகளில் காலியாக உள்ள இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர், இளநிலை மொழிபெயர்ப்பாளர், முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
காலியிடங்கள்: காலிப்பணியிடங்கள் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ssc.nic.in என்ற இணைய தளத்தை அவ்வப்போது பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முக்கியமான நாட்கள்:
அறிவிப்பு: 20.07.2022
விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க: 04.08.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும்
இணையம் வழியாக கட்டணம் செலுத்த 05.08.2022 (இரவு 11.00 மணி) கடைசி நாளாகும்.
விண்ணப்பிக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.100ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், கட்டணம் செலுத்த தேவையில்லை.
சம்பளம்: இளநிலை பதவிக்கு ரூ.35,400 முதல் 1,12,400 வரை சம்பளம்; முதுநிலை பதவிக்கு ரூ.44,900 முதல் 1,12,400 வரை
இதையும் வாசிக்க: TNPSC Group 4: குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுகிறது... 7,031 பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் போட்டி
விண்ணப்பம் செய்வது எப்படி: ssc.nic.in என்ற தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
யார் விண்ணப்பிக்கலாம்: நாட்டின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் தகுதிபடைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்விக்கான தகுதிகள் : இளநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர்/இளநிலை மொழிபெயர்ப்பாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத்துடன் கூடிய இந்தி மொழியில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முதுநிலை இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்க ஆங்கிலத்துடன் கூடிய இந்தி மொழியில் முதுநிலை பட்டமும், இந்தி - ஆங்கில மொழிபெயர்ப்பு படிப்பில் மூன்றாண்டுகள் டிப்ளோ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
இதையும் வாசிக்க: நீட் விலக்கு மசோதா : மத்திய அரசு கேள்விகளுக்கு பதில்கள் தயார் - அமைச்சர் மா.சுப்ரமணியன்
தெரிவு செய்யப்படும் முறை: இரண்டு தாள்கள் கொண்ட எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.
கணினி அடிப்படையிலான தேர்வு 2022 அக்டோபரில் நடைபெறும். தென்மண்டலத்தில் ஆந்திரப்பிரதேசத்தில் 3, தமிழ்நாட்டில் 3, தெலங்கானாவில் 1 என மொத்தம் 7 மையங்கள் / நகரங்களில் தேர்வு நடைபெறும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.