ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசில் 24,369 காவலர் பணியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

மத்திய அரசில் 24,369 காவலர் பணியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு

staff selection commission: மத்திய ஆயுத படைகள் (CAPFs), என்ஐஏ, எஸ்எஸ்எப் ஆகியவற்றில் காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு, 2022

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  மத்திய ஆயுதப்படைகளில் காலியாக உள்ள  காவலர், ரைபிள் மேன், சிப்பாய் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, தேர்வர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

  முன்னதாக,  ‘‘மத்திய ஆயுத படைகள் (CAPFs), என்ஐஏ, எஸ்எஸ்எப் ஆகியவற்றில் காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு, 2022’’ குறித்த அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(SSC) 27-10-2022ம் தேதியன்று வெளியிட்டது.

  இந்த ஆள்சேர்ப்பு அறிவிப்பின்  கீழ் 24369 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

  வயது வரம்பு : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.01.2023 அன்று வயது  18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை  சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

   கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல்களை கருத்தில் கொண்டு, அனைத்து பிரிவினருக்கும் கூடுதலாக 3 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படுகிறது.

  கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  இதையும் வாசிக்க: 787 கான்ஸ்டபிள்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்ககள்: 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

  தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்வு முறை இருக்கும்.   எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.     

  விண்ணப்பம்  செய்வது எப்படி? 

  ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள்  சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30-11-2022 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 01-12-2022.

  எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, 2023

  இதையும் வாசிக்க: கிராம உதவியாளர் தேர்வுக்கான சிலபஸ் என்ன... எப்படி தயாராகுவது?

  விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

  ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

  Constable (GD) in Central Armed Police Forces (CAPFs), SSF, Rifleman (GD) in 

  Assam Rifles and Sepoy in Narcotics Control Bureau Examination, 2022  

  Published by:Salanraj R
  First published:

  Tags: Central Government Jobs