SSC Delhi Police Head Constable Recruitment 2022 : டெல்லி காவல்துறையின் தலைமை காவலர் பதவிகளுக்கான (Head Constable) ஆட்சேர்ப்பு அறிவிப்பை பணியாளர் தேர்வு ஆணையம் விரைவில் வெளியிடயிருக்கிறது . ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதற்கான விண்ணப்பங்களை ssc.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 16-6-2022.
காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வரும் 17ம் தேதி வெளியாகும் பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ஆட்சேர்ப்பு அறிவிப்பில்) தெளிவாகக் கொடுக்கப்படும்.
முக்கியமான நாட்கள்:
ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியாகும் நாள் : மே 17
விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : ஜூன் 16
எழுத்துத் தேர்வு : உத்தேசமாக வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
கல்வித் தகுதி: 10, +2 பாடத் திட்ட முறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
சம்பளம்: ரூ. 25,500 முதல் ரூ.81,100 வரை
SSC 2022: எஸ்எஸ்சி-யில் 2065 காலிப்பணியிடங்கள் - மெட்ரிக் கல்வி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்
ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்க கூடாது என்றும் கூறப்படுகிறது.
ராணுவ கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்
தெரிவு செய்யப்படும் முறை: உடல்தகுதித் தேர்வு, தட்டச்சு தேர்வு, கம்ப்யூட்டர் அடிப்படையிலான எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.