டெல்லி காவல்துறையில் தலைமைக் காவலர் (உதவி வயர்லெஸ் ஆபரேட்டர் / டெலிபிரிண்டர் ஆபரேட்டர்), ஓட்டுநர் (ஆடவர்) பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தவுள்ளது. இதற்கு நாட்டின் அனைத்து பகுதியினரும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
ssc.nic.in என்ற ஆணையத்தின் இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி நாள் 29.07.2022 (இரவு 11 மணி). இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் 30.07.2022 (இரவு 11 மணி).
பணியின் அடிப்படையிலான தேர்வுகள் 2022 அக்டோபர் மாதத்தில் நடைபெறும். தலைமைக் காவலர் (உதவி வயர்லெஸ் ஆபரேட்டர் / டெலிபிரிண்டர் ஆபரேட்டர்) பணியிடங்களுக்கு தென்பிராந்தியத்தில் இருபது மையங்கள் / நகரங்களில் தேர்வு நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, தெலங்கானாவில் 3 என்ற எண்ணிக்கையில் இந்த மையங்கள் இருக்கும்.
மொத்த காலியிடங்கள்: 573
இதையும் வாசிக்க: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
தலைமைக் காவலர் - ஓட்டுநர் (ஆடவர்) பணியிடங்களுக்கு தென்பிராந்தியத்தில் 21 மையங்கள் / நகரங்களில் தேர்வு நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 10, தமிழ்நாட்டில் 7, தெலங்கானாவில் 3, புதுச்சேரியில் 1 என்ற எண்ணிக்கையில் இந்த மையங்கள் இருக்கும்.
இதையும் வாசிக்க: பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு.. தேதி அறிவிப்பு
பணியாளர் தேர்வாணையத் தென்பிராந்திய இயக்குநர் கே.நாகராஜா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.