ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

டிஎன்பிஎஸ்சி முதல் அஞ்சல் துறை வரை: இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் இதோ

டிஎன்பிஎஸ்சி முதல் அஞ்சல் துறை வரை: இந்த வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசு பணிகள் இதோ

காட்சிப் படம்

காட்சிப் படம்

Govt Jobs to apply this week: கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

List of Govt Jobs: வரும் வாரத்தில் விண்ணப்பிக்க வேண்டிய அரசுப் பணிகள் குறித்த முழு  விவரங்களையும் இங்கே காண்போம். விண்ணப்பதாரர் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நிமிடம் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே, போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SSC CHSL 2022 Notification:

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk), இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) உள்ளிட்ட Group C காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 04-01-2023 

இதையும் வாசிக்க

அ .  எஸ்எஸ்சி 4500 காலியிடங்கள்: இரண்டே மாதங்களில் தேர்வை கிராக் செய்வது எப்படி?

ஆ . SSC CHSL 2022: 12ம் வகுப்பு பாஸா? ரூ.92ஆயிரம் வரை சம்பளம்.. 4500 காலியிடங்களுக்கான விவரம் இதுதான்! 

2. Anna University Jobs: அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ள தமிழ் தொடர்பான பாடங்களைக் கற்பிக்கு தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்), மற்றும் பிஎச்டி(அல்லது) பிஏ (தமிழ்), எம்ஏ (தமிழ்) மற்றும் NET/SLET/SET ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 20ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

இதையும் வாசிக்க:

அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் தமிழ் ஆசிரியர் பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!

கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் திட்டப்பணி மேலாளர் (Project Associate) பணியிடங்கள். கடைசி தேதி 19.12.2022 ஆகும்.  

3. TNPSC Job Notification :

District Education officer Recruitment: காலியாக உள்ள 11 மாவட்ட கல்வி அலுவலர் (District Educational Officer (Group – I C Services) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNPSC வெளியிட்டது. வரும் ஜனவரி 13ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பிரிக்கலாம் என்றும் தெரிவித்தது.

இதையும் வாசிக்கடிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு ஷாக்: கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத ஏமாற்றம்

Assistant Conservator of Forests Recruitment:  தமிழ்நாடு உதவி வனப் பாதுகாவலர் (குரூப் 1ஏ நிலை பணி - Assistant Conservator of Forests included in Group–IA Services.) பதவிக்கான காலிப் பணியிடங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. வரும் ஜனவரி 12ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டது. வரும் ஜனவரி 7ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

4. Kendriya Vidyalaya Recruitment: 

முதுநிலை ஆசிரியர், தொடக்க கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கேந்திரிய வித்யாலயா சங்கதன்  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆட்சேர்ப்பின் மூலம், 13,404 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கேந்திரிய வித்யாலயாவில் 13,404 பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள்.. ரூ.2,09,200/- வரை சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்..

கல்வித்தகுதி என்ன? - முழு விவரம் இதோ 

5. தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலைவாய்ப்பு 

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ( TNSRLM) , தேசிய ஊரக பொருளாதார மாற்றத் திட்டம் ( NRETP), தீன் தயாள் உபாத்தியாய கிராமின் கௌசல்ய யோஜனா (DDUGKY) ஆகிய திட்டங்களின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்  வெளியிட்டது.

இதற்கு, விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.12.2022 ஆகும்.

6. Trichy District Recruitment:  திருச்சி மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியான நபர்கள் வரும் 26-ம் மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்புத் தேர்ச்சியா? சுகாதார அலுவலகத்தில் பல்வேறு காலியிடங்கள் அறிவிப்பு 

7. indian Post Office Recruitmentஇந்திய அஞ்சல் துறையின் சென்னை கிரிமிஸ் சாலையில் உள்ள தமிழக அஞ்சல் ஊர்தி சேவை (Office of the Senior Manager, Mail Motor service) திறன்வாய்ந்த கைவினைக் கலைஞர்களுக்கான (Skilled Artisans) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டது.  வரும் ஜனவரி மாதம் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

இதையும் வாசிக்க:  அஞ்சல்துறையில் வேலைவாய்ப்பு : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!

First published:

Tags: Central Government Jobs, Tamil Nadu Government Jobs