ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசில் 4,500 காலியிடங்கள்: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசில் 4,500 காலியிடங்கள்: 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்; உடனே விண்ணப்பியுங்கள்

மத்திய அரசு வேலைவாய்ப்பு

மத்திய அரசு வேலைவாய்ப்பு

Group C  காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu |

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk), இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant) உள்ளிட்ட Group C  காலி பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கையை மத்திய அரசுப் பணியாளர் (SSC) தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

முழு விவரங்கள்: 

அறிவிக்கைஒருங்கிணைந்த மேல்நிலை (10+2) தேர்வு 2022-க்கான (Combined Higher Secondary (10+2) Level Examination)
காலியிடங்கள்தோராயமாக 4500
பணியின் பெயர்இளநிலை எழுத்தர் (Lower Divisional Clerk) / இளநிலை செயலக உதவியாளர் (Junior Secretariat Assistant),, தரவு உள்ளிடும் பணியாளர் (Data Entry Operators), தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ நிலை (Data Entry Operator, Grade ‘A’)
இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள்04-01-2023
சம்பள விவரம்இளநிலை எழுத்தர்/இளநிலை செயலக உதவியாளர் : ரூ. 19,900-63,200 சம்பள நிலை 2தரவு உள்ளிடும் பணியாளர்: ரூ.29,200-92,300 வரை (சம்பள நிலை -5)தரவு உள்ளிடும் பணியாளர் குரூப் ஏ: ரூ.25,500-81,100
கல்வித் தகுதி12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது01-01-2022 அன்று விண்ணப்பதாரரின் வயது 18க்கு மேலும், 27க்கு கீழும் இருக்க வேண்டும்.
விண்ணப்பம் செய்வது எப்படி?ssc.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

இதையும் வாசிக்க: அரசு வேலை உங்கள் கனவா? - இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு: இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதற்பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

First published:

Tags: Central Government Jobs, SSC