மத்திய அரசில் வேலை.. மாதம் ₹47 ஆயிரம் சம்பளம்... உடனே விண்ணப்பியுங்கள்...

SSC CGL Registration 2019: Application for Combined Graduate Exam Ends on Nov 25, Apply on ssc.nic.in

மத்திய அரசில் வேலை.. மாதம் ₹47 ஆயிரம் சம்பளம்... உடனே விண்ணப்பியுங்கள்...
SSC CGL Registration 2019: Application for Combined Graduate Exam Ends on Nov 25, Apply on ssc.nic.in
  • Share this:
SSC எனப்படும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் தற்போது ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு பிரிவுக்கான SSC CGL தேர்வுகளை அறிவித்துள்ளது. 

SSC CGL தேர்வில் தேர்ச்சி பெற்றால், மத்திய அரசு வேலை உறுதி.

இது தொடர்பாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தனது அதிகாரப்பூர்வ இணையதளமான www.sscsr.gov.in ல் தேர்வு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. மொத்தம் 34 விதமான பணிகளுக்குத் SSC CGL தேர்வுகள் நடைபெறுகிறது.


SSC அமைப்பு நடத்தும் சில முக்கிய தேர்வுகள்

1. Combined Graduate Level Examination-CGLE

2. Stenographer Grade C / Grade D Examination3. Combined Higher Secondary Level (10+2 Level) Examination- CHS

4. Multi Tasking Staff – Technical and Non-Technical

5. Junior Engineer Examination Combined Graduate Level Examination என்ற தேர்வைத்தான் 'SSC CGL' என்று சொல்கிறார்கள். இதில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.

4 நிலைகளில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

1. Combined Graduate Level Examination - Tier 1

2. Combined Graduate Level Examination - Tier 2

3. Descriptive - Tier 3

4. Skill Test - Tier 4

இந்த நான்கு நிலைகளிலும் வெற்றி பெறுபவர்களுக்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் வழங்கப்படும். குறிப்பாக, இந்தியன் ஆடிட் அன்ட் அக்கவுன்ட்ஸ் டிபார்ட்மென்ட் (CAG) துறையில் Assistant Audit officer, Assistant account officer பணிகளை இந்தத் தேர்வில் வெற்றிபெறுவதன்மூலம் பெறமுடியும். Central Secretariat Service துறையில் Assistant Section Officer பணியும்கூட இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்படும்.

Intelligence Bureau, ரயில்வே, வெளியுறவுத் துறை போன்ற துறைகளில் Assistant section officer பணியும் இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்குக் கிடைக்கும். அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு ரூ.47,600 முதல் ரூ. 1,51,100 வரையில் சம்பளம் வழங்கப்படுகிறது. இவைதவிர, வருமான வரித்துறையில் Inspector of Income tax, Inspector of central excise, Preventive officer, Examiner போன்ற பணிகளும் இந்தத்தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்படுகின்றன.

புள்ளியியல் துறையில் Junior Statistical Officer, CPI Inspector, Postal department inspector போன்ற பல உயர்நிலை பணிகளுக்கும் இந்தத் தேர்வு மூலம் நியமனம் நடக்கிறது. மத்திய அரசின் பல்வேறு துறைகளில் Assistant section officer, Assistant enforcement officer, Sub-Inspector, Inspector போன்ற பணிகளும் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்குக் கிடைக்கும்.

SSC CGL Exam எழுத வயது வரம்பு:

SSC CGL தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு பதவிக்கு ஏற்றார் போல் மாறுபடுகிறது. குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 32 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்ட பிரிவினருக்கு SSC CGL Exam எழுதுவதற்கு வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

SSC CGL Exam கல்வித்தகுதி:

அசிஸ்டெண்ட் ஆடிட் ஆபீசர், அசிஸ்டெண்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். சிஏ படிப்பு கூடுதல் தகுதியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல், இளநிலை புள்ளியியல் அலுவலர் பணிக்கு 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 12 வகுப்பில் கணித பாடம் அடங்கியிருக்க வேண்டும்.

SSC CGL தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பப்பதிவு அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்கியுள்ளது. நவம்பர் 25 ஆம் தேதி விண்ணப்பப்பதிவு முடிவடைகிறது.

இதற்கான விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய் ஆகும். SC, ST, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினருக்கு விண்ணப்பக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பக்கட்டணத்தை ஆன்லைனிலோ, நேரடியாக வங்கியின் மூலமாகவோ செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைனில் நவம்பர் 27 ஆம் தேதிக்குள்ளாகவும், வங்கியின் மூலமாக செலுத்துவோர், நவம்பர் 29 ஆம் தேதிக்குள்ளாகவும் செலுத்த வேண்டும். SSC CGL Exam 2019 முதல் நிலைத் தேர்வுகள் அடுத்த வருடம் மார்ச் 2 முதல் 11 ஆம் தேதி வரையில் நடைபெறும்.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர் மாவட்டங்களில் தேர்வு மையங்கள் உள்ளது.

தெற்கு மண்டல SSC க்கான அலுவல் முகவரி: Regional Director (SR), Staff Selection Commission, 2 nd Floor, EVK Sampath Building, DPI Campus, College Road, Chennai, Tamil Nadu-600006 www.sscsr.gov.in

SSC CGL 2019 தேர்வு எழுதுவதற்க்கான முழுமையான கல்வித்தகுதி, பணி முறை, தேர்வு பாடத்திட்டம், கால அட்டவணை உள்ளிட்ட முழு விபரங்களுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Click: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_CGLE_22102019.pdf

 
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading