SSC CGL Examiantion 2022: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு அளவிலான (Combined Graduate Level) தேர்வுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை 13.10.2022 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. முன்னதாக, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் தேதி அக்டோபர் 8, ஆக இருந்த நிலையில், தற்போது அக்டோபர் 13 வரை நீட்டிக்கப்பட்டது.
இந்த ஆள் சேர்க்கை அறிவிப்பின் மூலம் 20,000க்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. குரூப் B(அமைச்சகம் சாரா, அரசிதழ் பதிவு பெற்ற Assistant Audit Officer, Assistant Audit Officer, Assistant Accounts Officer ), குரூப் B உதவி பிரிவு அலுவலர் (Assistant Section officer), குரூப் C பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.
நிலை - 1, நிலை - 2 என இரண்டு நிலையில் கணினி வழியில் நடைபெறும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தேர்வுகளுக்கு நிலை 1-ல் பொதுவான போட்டித் தேர்வுகளுக்குரிய பாடத்திட்டங்களான General Intelligence and Reasoning, General Awareness, Quantitative Aptitude, English Comprehension பிரிவுகளிலிருந்துதான் வினாக்கள் கேட்கப்படுகிறது. நிலை 2-ல் Mathematics Abilities, Reasoning and General Intelligence, English, General Awareness and Computer Knowledge மற்றும் General studies பாடப் பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படுகிறது. எனவே, ஆர்வம் தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இதையும் வாசிக்க: ஓமனில் வேலை...ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம் இதோ!
வயது வரம்பு: 01.01.2022 அன்றைய நிலையில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினர் 30 வயதுக்குள்ளும், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 33 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும். மேலும், முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நடைமுறை விதிகளின் படி வயது வரம்பில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: Assistant Audit Officer/Assistant Accounts Officer பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். விரும்பத்தக்கவை: பட்டய கணக்காளர்.
இளநிலை புள்ளியியல் அதிகாரி பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அங்கீகரிப்பட்ட இளநிலை பட்டம் அல்லது புள்ளியியல் படிப்பு கொண்ட பாடநெறியில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.
ஏனைய பதவிகளுக்கு, அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கட்டணம்: தேர்வுக் கட்டணமாக ரூபாய் 100/-நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் பெண்கள், எஸ்.சி.எஸ்.டி, வகுப்பினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்வது எப்படி?
www.ssc.nic.in apply என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
Combined Graduate Level Examination, 2022
தேர்வுக்கு தயாராகுவது எப்படி?
tamilnaducareerservices.tn.gov.in:
எஸ்எஸ்சி தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் "tanëeducareerservibes.tn.gov.ir' என்ற மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இணையதளம் அரசு வேலை பெற விரும்பும் அனைத்து இளைஞர்கள், குறிப்பாக கிராமப்புற இளைஞர்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதால் இவ்விணையதளத்தில் பதிவுசெய்து அனைத்து அரசுப் பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை பதிவிறக்கம் செய்து படித்து பயனடையலாம்.
கல்வித் தொலைக்காட்சி: தமிழ்நாட்டில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்காக கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பயிற்சி வகுப்புகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இந்நிகழ்ச்சியில், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் (SSC-CGL) போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்மற்றும் நடப்பு நிகழ்வுகள் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகளை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படுகிறது.
கல்வித்தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பப்படும் இப்பயிற்சி வகுப்புகள் யாவும் TN Career Services Employment' என்ற YouTube Channel-ல் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்: தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர்' தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான (Staff Selection Commission Exam - CGL) கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்படவுள்ளன. எனவே, உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினைத் தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம்.
மேலும், விவரங்களுக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையை அணுகலாம்.
அந்தந்த, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் தொடர்புக்கு இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: SSC