ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

SSC CGL Tier 1 தேர்வு தேதி அறிவிப்பு..! - முழு விபரம்

SSC CGL Tier 1 தேர்வு தேதி அறிவிப்பு..! - முழு விபரம்

SSC CGL

SSC CGL

தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, கமிஷனின் முக்கிய இணையதளமான ssc.nic.in ஐ தொடரவும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai, India

உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட 35 பி, சி நிலை பதவிகளுக்கு நடக்கும் SSC CGL தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியாளர் தேர்வாணையம் நடத்தும் SSC CGL Tier 1 தேர்வுக்கான தேர்வு தேதிகள் மற்றும் அட்டவணையை அறிவித்துள்ளது. பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள், ssc.nic.in எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முழு அட்டவணையையும் சரிபார்த்து அதற்கு 4 நாள் முன்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

SSC CGL 2022 தேதிகள்

அதிகாரப்பூர்வ அட்டவணையின்படி, SSC CGL Tier 1 தேர்வு டிசம்பர் 1, 2022 அன்று தொடங்கி, டிசம்பர் 13, 2022 அன்று முடிவடையும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இங்கே க்ளிக் செய்யவும் 

கோவிட்-19 தொற்று மேலாண்மை தொடர்பான தற்போதைய நிலைமைகள் மற்றும் அரசாங்க வழிகாட்டுதல்களைப் பொறுத்து, மேற்கண்ட அட்டவணைகள் மாற்றத்திற்கு உட்படலாம். மேலும் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டால் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும்.

TNPSC குரூப் 2 முதன்மை தேர்வுக்கு என்னென்ன புத்தகங்கள் படிக்க வேண்டும்.. புக்லிஸ்ட் இதோ!

தேர்வு விவரங்கள்

  • SSC CGL அடுக்கு 1 தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வு (CBT) வடிவத்தில் நடத்தப்படும்.
  • பொது நுண்ணறிவு, பகுத்தறிவு, கணக்கு மற்றும் ஆங்கிலம் ஆகிய தலைப்புகளில் தெரிவுகள் அடங்கிய கேள்விகள் இருக்கும்.
  • ஒவ்வொரு தலைப்பிலும் 25 கேள்விகள் வீதம் மொத்தம் 100 கேள்விகள் கேட்கப்படும்.
  • தேர்வின் காலம் - 1 மணி நேரம் - 60 நிமிடங்கள்.
  • வினாத்தாள் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.

இந்த தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவலுக்கு, கமிஷனின் முக்கிய இணையதளமான ssc.nic.in மற்றும் பிராந்திய இணையதளங்களைப் பார்வையிடுமாறு வேட்பாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Competitive Exams, SSC