ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

SSC CGL 2022 க்கு இன்னும் விண்ணப்பிக்கலையா.. கவலை வேண்டாம்! - மேலும் அவகாசம் நீட்டிப்பு

SSC CGL 2022 க்கு இன்னும் விண்ணப்பிக்கலையா.. கவலை வேண்டாம்! - மேலும் அவகாசம் நீட்டிப்பு

SSC CGL

SSC CGL

தொழில்நுட்ப காரணங்களாலும் இணைப்பு சிக்கல்கள் இருந்ததாலும் கடந்த 2 நாட்களாக பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  டிசம்பர் நடைபெற இருக்கும், எஸ்எஸ்சி ஒருங்கிணைந்த பட்டதாரி SSC CGL 2022 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தும் கடைசி தேதிகளையும் நீட்டித்துள்ளனர்.

  உதவி தணிக்கை அதிகாரி/உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியியல் அதிகாரி உள்ளிட்ட 35 பி, சி நிலை பதவிகளுக்கு நடக்கும் SSC CGL தேர்வுக்கான விண்ணப்பங்களுக்கு கடைசி தேதி 08/10/2022 ஆக இருந்தது. ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த 09-10-22 கடைசி தேதியாக இருந்தது. சலான் மூலம் கட்டணம் செலுத்த 10-10-2022 கடைசி தேதியாக இருந்தது.

  தொழில்நுட்ப காரணங்களாலும் இணைப்பு சிக்கல்கள் இருந்ததாலும் கடந்த 2 நாட்களாக பலர் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இறுதி நாளில் அதிக மாணவர்கள் உள்நுழைய முயன்றதால் ஏற்பட்ட இந்த சிக்கல்கள் காரணமாக ssc விண்ணப்பத்திற்கான கடைசி தேதியை நீடித்துள்ளது.

  SSC CGL 2022 தேர்வை எதிர்கொள்வது எப்படி! - ஒரு முழுமையான வழிகாட்டல்!

  அதன்படி,

  ஒருங்கிணைந்த பட்டதாரி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13-10-2022 இரவு 11.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த 14-10-2022 இரவு 11.00 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  வங்கிகளின் சலான் மூலம் 15-10-2022 வரை கட்டணம் செலுத்தலாம்.

  விண்ணப்பத்தில் ஏதேனும் திருத்தம் இருந்தால் 19-10-2022 மற்றும் 20-10-2022 ஆகிய தேதிகளில் செய்துகொள்ளலாம்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Competitive Exams, SSC